ஆசிரியர் தகுதித் தேர்வு எப்போது..? உத்தேச அட்டவணையை வெளியிட்டது தேர்வு வாரியம்!!
ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) இந்த ஆண்டு நடத்த உள்ள தேர்வுகளின் உத்தேச கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆசிரியர் பணியிடங்களுக்கான TET தகுதித்தேர்வு ஜூலையில் நடைபெறும் என்றும் இதற்கான அறிவிப்பாணை ஏப்ரலில் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், 1,766 இடங்களுக்கான 2ம் நிலை ஆசிரியர் பணிக்கான (SGT) தேர்வு குறித்த அறிவிப்பு இம்மாதம் வெளியிடப்படும் என்றும் ஏப்ரல் மாதம் தேர்வு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்று, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 4,000 இடங்களுக்கான உதவி பேராசிரியர் பணிக்கான தேர்வு ஜூன் மாதம் நடைபெறும் என உத்தேச கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கான அறிவிப்பு பிப்ரவரி மாதம் வெளியாகி ஜூன் மாதம் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், முதுநிலை ஆசிரியர்கள் பணிக்கு 200 இடங்கள் காலியாக இருப்பதாகவும், மே மாதம் இதன் அறிவிப்பு வெளியாகி, ஆகஸ்ட் மாதம் தேர்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்துக்கு சென்று தெரிந்து கொள்ளலாம் என்றுள்ளனர்.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.