மொத்தமும் போச்சே கதறிய உரிமையாளர்.. பனியன் கம்பெனியில் திடீர் தீ விபத்து..!

Author: Vignesh
26 August 2024, 7:49 pm

திருப்பூர் – இடுவம்பாளையம் சாலையில், பனியன் நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டத்தில், பனியன் துணிகள், இயந்திரங்கள் என பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதம்.

திருப்பூர் – இடுவம்பாளையம் சாலையில், பால்மணி என்பவருக்கு சொந்தமான பனியன் நிறுவனம் உள்ளது. இங்கு பின்னலாடை துணிகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இதற்காக பின்னலாடை உற்பத்திக்கு பயன்படக்கூடிய சிங்கர், ஓவர்லாக், பேட்லாக் தையல் இயந்திரங்கள் மற்றும் பின்னலாடை துணிகள் வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நேற்று விடுமுறை தினம் என்பதால் நிறுவனம் பூட்டப்பட்டிருந்த நிலையில், நள்ளிரவில் பனியன் நிறுவனத்தில் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. நிறுவனம் முழுவதும் துணிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததால் தீ மள மள வென பற்றி எரிந்துள்ளது. இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக பின்னலாடை நிறுவன உரிமையாளருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் அளித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருப்பூர் வடக்கு, தெற்கு தீயணைப்பு துறையினர் 4 தீயணைப்பு வாகனங்கள் மூலமாக சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த தீ விபத்தில் பின்னலாடை நிறுவனத்தில் இருந்த தையல் இயந்திரங்கள் துணிகள் என பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்துள்ளது. தீ விபத்து குறித்து, திருப்பூர் மத்திய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Samantha dating Raj Nidimoru அந்த இயக்குனருடன் நடிகை சமந்தா டேட்டிங்…வெளிவந்த புகைப்படத்தால் ரசிகர்கள் ஷாக்..!