சைதை துரைசாமியின் மகன் எங்கே? சவால் நிறைந்த போராட்டம் : தேடும் பணியில் பேரிடர், ராணுவ வீரர்கள்!

Author: Udayachandran RadhaKrishnan
7 February 2024, 3:49 pm

சைதை துரைசாமியின் மகன் எங்கே? சவால் நிறைந்த போராட்டம் : தேடும் பணியில் பேரிடர், ராணுவ வீரர்கள்!

சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி கடந்த ஞாயிறன்று இமாச்சல் பிரதேசம் சென்றிருந்தார். அப்போது சட்லஜ் ஆற்றில் அவரது கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது

ஓட்டுநர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் காரில் இருந்த ஒருவர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், காரில் பயணம் செய்த வெற்றி துரைசாமி எங்கே என்பது தெரியவில்லை.

கார் ஓட்டுநருக்கு மாரடைப்பு ஏற்பட்டு நதியில் கார் கவிழ்ந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இரண்டு நாட்களாக அவரை தேடும் பணி தீவிரம் அடைந்திருந்தது. தற்போது மூன்றாவது நாளான இன்றும் வெற்றியை தேடும் பணியை தீவிர படுத்தியுள்ளனர்.

விபத்து நடந்த இடத்திலிருந்து 15 கி.மீ சுற்றளவில் தேடும் பணி நடைப்பெற்று வருகிறது. தற்போது, இன்று காலை விபத்து நடந்த இடத்தில் அவரது ஐ-போனை மீட்பு குழுவினர் கைப்பற்றி உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். அதை கைப்பற்றி அவர் கடைசியாக யாரிடம் பேசினார், என்னென்ன பேசினார் என்னும் தகவலையும் சேகரித்து வருகிறார்கள்.

தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், இந்தோ திபத்திய வீரர்கள், ராணுவ படை வீரர்கள் என கிட்டத்தட்ட 100 வீரர்கள் இந்த தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று மதியம் இந்திய கடற்படையில் நீச்சல் திறன் பெற்ற வீரர்களும் இந்த தேடுதலில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

  • Rafael Nadal retirement reaction by Dhanush ஓய்வு அறிவிப்பு.. நடிகர் தனுஷின் உருக்கமான பதிவு..
  • Views: - 269

    0

    0