கடந்த ஆட்சி காலத்தில் அரசு மதுபான கடைகளை மூடச் சொல்லி நாடகம் ஆடிய கூட்டம் எங்கே ? தமிழக பாஜக நறுக் கேள்வி!
Author: Udayachandran RadhaKrishnan25 ஜூன் 2024, 8:19 மணி
திண்டுக்கல் பாரதிய ஜனதா கட்சி கிழக்கு மாவட்ட அலுவலகத்தில் 50ஆவது ஆண்டு எமர்ஜென்சி தினத்தை முன்னிட்டு பத்திரிகையாளர் சந்திப்பு மாவட்ட தலைவர் தனபால் தலைமையில் நடைபெற்றது.
இதில் பாஜகவின் தேசிய குழு உறுப்பினர் புரட்சிக் கவிதாசன் கலந்துகொண்டு அளித்த பேட்டியில், கடந்த 1975 ஜூன் 20ஆம் தேதி முதல் 1977 மார்ச் மாதம் வரை இரண்டு ஆண்டு காலம் இந்தியாவின் கருப்பு தினமாக இருந்தது.
அப்போது ஆண்ட காங்கிரஸ் ஆட்சி பாராளுமன்ற அறிக்கையில் நீதிமன்றம் தலையிடக்கூடாது என உத்தரவு பிறப்பித்து பல்வேறு ஏழை எளிய மக்களை அடிப்படை உரிமைகள் கூட பெற முடியாத அளவிற்கு நெருக்கியது. இந்த வாழ்வாதாரம் மற்றும் சட்ட ஒழுங்கு பாதிக்கப்பட்டது. மேலும் மக்கள் பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகினர்.
அதனை நினைவுபடுத்த எந்த ஒரு முயற்சியும் இதுவரை யாரும் எடுக்காத நிலையில் பாஜக அதனை முன்னெடுத்துள்ளது. கள்ளக்குறிச்சியில் 50க்கும் மேற்பட்டோர் கள்ளச்சாராயத்தால் பலியாகி உள்ளனர். அதில் சிறு குழந்தைகள் கள்ளச்சாராயம் சாப்பிட்டால் உடனடி பலியாகி உள்ளனர் அரசு மதுபானமான டாஸ்மாக் குடித்தால் சிறுக சிறுக உயிரிழக்கின்றனர். ஆகவே தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என பாதிக்கப்பட்ட குழந்தைகள் ஏற்கவே தெரிவித்து வருகின்றனர்.
மேலும் கடந்த ஆட்சி காலங்களில் மதுவிலக்கு கேட்டு நாடகம் ஆடிய நந்தினி உள்ளிட்டோர் தற்போது எங்கு சென்றனர் என கேள்வி எழுப்பினார். கள்ளச்சாராயத்தில் உயிரிழந்த பிரச்சனைக்கு தார்மீக பொறுப்பேற்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் பதவி விலக வேண்டும் மேலும் அத்துறையின் அமைச்சர் முத்துசாமியும் பதவி விலக வேண்டும். சட்டமன்றத்தில் வெளிநடப்பு விவகாரத்தில் திமுக அதிமுக இரண்டுமிணைந்து நாடகம் ஆடி வருகின்றது என பேசினார்.
0
1