பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் கட்சிக்காக உழைப்பேன் : கே.எஸ். அழகிரி பேச்சு!!

Author: Udayachandran RadhaKrishnan
27 June 2023, 2:38 pm

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியின் பதவிக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து புதிய தலைவர் நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் கார்கே, ராகுல்காந்தி, வேணுகோபால் ஆகியோர் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். தலைவர் பதவிக்கு ஜோதிமணி எம்.பி., செல்லக்குமார் எம்.பி., கார்த்தி சிதம்பரம், முன்னாள் எம்.பி., பி.விசுவநாதன் ஆகியோர் தீவிரமாக முயற்சித்து வருகிறார்கள்.
டெல்லி சென்றுள்ள தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று இரவு அகில இந்திய தலைவர் கார்கேவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது அரசியல் நிலவரங்கள் பற்றி பேசியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழக காங்.தலைவர் பதவிக்கு யாரை நியமித்தாலும் மகிழ்ச்சி தான். காங்கிரஸ் மாநில தலைவராக எனக்கு உரிய பணியை செய்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். தமிழக அரசியல் தொடர்பாக காங். தேசிய தலைவர் கார்கேவுடன் ஆலோசனை நடத்தினேன்.

பதவி கேட்டு காங்கிரஸ் தலைவர்களை சந்தித்தது கிடையாது. பதவி கிடைத்த பின்னர், பதவியை தக்க வைக்க தலைவர்களை சந்திப்பது கிடையாது. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக நீடித்தாலும் மகிழ்ச்சி, வேறு ஒருவரை நியமித்தாலும் மகிழ்ச்சி தான். எனக்கு ஒரு பணி வழங்கப்பட்டால் அதை மகிழ்வுடன் செய்வேன்.

தமிழகத்தில் 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 72% வெற்றியை காங்கிரஸ் பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் அதிகமான எண்ணிக்கையில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.

இன்றைக்கும் என்னுடைய கருத்து எவ்வளவு தொகுதி பெறுகிறோம் என்பதல்ல… எவ்வளவு வெற்றி பெறுகிறோம் என்பது தான். நான் பதவியில் இருந்தாலும் இல்லையென்றாலும் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபடுவேன்.” என்று கூறினார்.

  • Ajith exits Neeruku Ner விஜய் படத்திற்கு NO சொன்ன அஜித்..அடுத்தடுத்து விலகிய பிரபலங்கள்..!
  • Views: - 367

    0

    0