தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை? முழு விபரம்!!
Author: Udayachandran RadhaKrishnan8 December 2022, 10:14 pm
வங்கக்கடலில் தென்கிழக்கு திசையில் நிலைகொண்டுள்ள மாண்டஸ் புயல் 13 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. வங்கக்கடலில் தென்கிழக்கு திசையில் நிலைகொண்டுள்ள மாண்டஸ் புயல் தீவிர புயலாக மாறியது.
சென்னையில் இருந்து 440 கி.மீ காரைக்காலில் இருந்து 350 கி.மீ தொலைவில் கிழக்கு தென்கிழக்கு திசையில் மாண்டஸ் புயல் நிலைகொண்டுள்ளது.
நாளை காலை வரை தீவிர புயலாக நகர்ந்து பிறகு சற்றே வலு குறைந்து புயலாக இரவு கரையை கடக்கும். மாண்டஸ் புயல் கரையை கடக்கும் போது அதிகபட்சமாக 85 கி.மீ வேகம் வரை காற்று வீச வாய்ப்பு உள்ளது.
நாளை நள்ளிரவு புதுச்சேரி – ஸ்ரீஹரிகோட்டா இடையே மாமல்லபுரம் அருகே புயல் கரையை கடக்கிறது.காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், வரும் 10-ம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டள்ளது.
இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், ராணிப்பேட்டை, கடலூர், திருவாரூர், தஞ்சை, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, சேலம், நாமக்கல், தருமபுரி, நாகப்பட்டினம், திருவண்ணாமலை, திருச்சி, திருப்பத்தூர், சிவங்ககை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (டிச.9) விடுமுறை அளித்து அம்மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர்.