சினிமாவில் பல ஜோடிகள் இன்னும் சேர்ந்து நடிக்காமல் உள்ளனர். இருவரும் பல ஹிட் படங்களை கொடுத்திருப்பார்கள் ஆனால் அவர்கள் ஏதோ சில காரணங்களால் ஜோடி சேராமல் இருந்திருப்பர். அப்படி எத்தனையோ நடிகர், நடிகைகள் இருக்கலாம்.
அதில் பிரசாந்த் நக்மா ஜோகளை சொல்லலாம். பிரசாந்த் வளர்ந்து வரும் புதுமுக நடிகராக 90களுக்கு பிற்பகுதியில் பல படங்களில் நடித்தார். நக்மா வந்த வேகத்தில் தமிழ் சினிமாவில் அனைத்து முன்னணி நடிகருடன் இணைந்தார்.
அப்படி பிரசாந்துடன் ஜோடி சேர்ந்த எத்தனையோ நடிகைகள் உள்ள போதில் நக்மாவுடன் நடிக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது. குறிப்பாக பிரம்மாண்ட இயக்குநரான ஷங்கர் படத்தில் நடிக்க அப்போதைய நடிகர் நடிகைகள் தவமாய் தவமிருந்தனர்.
ஆனால் பிரசாந்த் வீட்டுக் கதவை தட்டி வாய்ப்பு தேடி வந்தது. ஆனால் பிரசாந்த் நடிக்க மாட்டேன் என கூறிவிட்டாராம். ஷங்கர் இயக்கத்தில் பிரபுதேவா நக்மா நடித்து பெரிய ஹிட் ஆன படம் காதலன்.
நல்ல கதை, திரைக்கதையுடன் மெகா ஹிட் ஆன படத்தில் பாடலுக்கு தேசிய விருதும் கிடைத்தது. ஆனால் அந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு வரும் போது, மணிரத்னம் இயக்கத்தில் உருவான திருடா திருடா படத்தில் பிரசாந்த் பிஸியானதால் அந்த வாய்ப்பை வேண்டாம் என உதறி தள்ளிவிட்டாராம்.
பிறகு காதலன் படத்தில் பிரபு தேவா நடித்து கொடுத்தார் படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. பின்னர் ஜீன்ஸ் படத்தில் பிரசாந்த் உடன் இணைந்து பணியாற்றினார் ஷங்கர். ஜீன்ஸ் படம் செம ஹிட் ஆனது. அந்த படத்தில உலக அழகி ஐஸ்வர்யா ராய் நடித்திருந்தார். ஆனால் உள்ளூர் அழகி நக்மாவுடன் நடிக்காமல் போனது அவரது ரசிகர்களுக்கு வருத்தம்தானாம்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.