கவுன்சிலர் சீட்டில் உட்கார நீ யார்? கவுன்சிலரின் கணவரை கண்மூடித்தனமாக தாக்கிய திமுக பிரமுகர்!

Author: Udayachandran RadhaKrishnan
16 February 2024, 8:59 pm

கவுன்சிலர் சீட்டில் உட்கார நீ யார்? கவுன்சிலரின் கணவரை கண்மூடித்தனமாக தாக்கிய திமுக பிரமுகர்!

சென்னை மாநகராட்சி வளசரவாக்கம் 11வது மண்டலத்தில் 153வது வார்டு கவுன்சிலராக உள்ளவர் சாந்தி ராமலிங்கம்.

போரூரில் 153வது வார்டு மாநகராட்சி அலுவலகத்தில் கவுன்சிலர் அமரக்கூடிய சீட்டில் அவரின் கணவர் ராமலிங்கம் அமர்ந்திருந்தார்.

அப்போது அங்கு வந்த 154வது வார்டு ராமாபுரம் திமுக சென்னை தெற்கு இளைஞரணி துணை அமைப்பாளர் ரவி, அலுவலகத்தில் புகுந்து கவுன்சிலர் உட்கார வேண்டிய சீட்டில் உட்கார நீ யார் என கேட்டுள்ளார்.

இதனால் கடுப்பான ராமலிங்கம் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பானது. பின்னர் வாக்குவாத கைக்கலப்பாக மாறியது.

இந்த மோதலில் ரவியும் , கவுன்சிலரின் கணவர் ராமலிங்கமும் மாறி மாறி தாக்கிக் கொண்டனர். திமுக நிர்வாகிகள் தாக்கிக் கொண்ட வீடியோ இணையத்தில் வைரலானது.

இருவரும் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் வாக்குவாதம் செய்யதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இந்த மோதல் சம்பவம் குறித்து காவல்நைலயத்தில் எந்த புகாரும் பதிவு செய்யப்பட்வில்லை.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ