அமைச்சருக்கும், ஆணையருக்கும் முரண்பாடு.. யாரைக் காப்பாற்ற திமுக முயற்சிக்கிறது? அண்ணாமலை கேள்வி!

Author: Hariharasudhan
27 December 2024, 5:12 pm

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் யாரைக் காப்பாற்ற திமுக அரசு முயற்சிக்கிறது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை: இது தொடர்பாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், “அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கு விசாரணை செல்லும் விதம், பல சந்தேகங்களை எழுப்புகிறது. உயர் கல்வித்துறை அமைச்சர், இன்று ஊடகங்களில் பேசுகையில், முதலில் காவல்துறையிடம் புகார் அளித்த பிறகே, பல்கலைக்கழகத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது என்று கூறியிருக்கிறார்.

ஆனால், நேற்று ஊடகங்களைச் சந்தித்த சென்னை காவல்துறை ஆணையர், பல்கலைக்கழகத்தின் குழு மூலமாகவே காவல்துறைக்குப் புகார் வந்தது என்று கூறுகிறார். ஏன் இத்தனை முரண்பாடுகள்? உண்மையில் யாரைக் காப்பாற்ற திமுக அரசு முயற்சிக்கிறது? உண்மையில் என்ன நடந்தது?

அதுமட்டுமின்றி, பாதிக்கப்பட்ட மாணவி, குற்றவாளிக்குத் தொலைப்பேசி அழைப்பு வந்ததாகத் தெரிவித்ததாகவும், சார் என்று கூறி, குற்றவாளி பேசியதாகவும் தெரிவித்ததாக முதலில் செய்திகள் வெளிவந்தன. ஆனால், அதனை அப்படியே வெளிவராமல் மறைக்கும் முயற்சி நடப்பதாகத் தெரிகிறது.

Who is DMK trying to save in Anna University Harassment issue asked BJP Annamalai

இந்தக் குற்றத்தில் தொடர்புடையவர்கள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்வரை தமிழக பாஜக இதனை விடப் போவதில்லை. பிரச்னையை மடைமாற்றி, உண்மையை மறைத்துவிடலாம் என்ற நோக்கம் திமுக அரசுக்கு இருக்குமேயானால், திமுக அரசுக்கும் இந்தக் குற்றத்தில் தொடர்பு இருப்பதாகத் தான் கருத முடியும்” எனத் தெரிவித்து உள்ளார்.

இதையும் படிங்க: நடிகர் சிவராஜ்குமார் எப்படி இருக்கிறார்…அமெரிக்காவில் இருந்து வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!

முன்னதாக, அண்ணா பல்கலைக்கழகத்தில் 2ஆம் ஆண்டு படிக்கும் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்த நிலையில், திமுக அரசைக் கண்டித்து, தன்னைத்தானே சாட்டையால் அடித்து அண்ணாமலை நூதன போராட்டத்தை மேற்கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 67

    0

    0

    Leave a Reply