பள்ளிகளை மூட சொல்ல ஹெச் ராஜா யாரு? கல்வி அமைச்சரா? கொந்தளிக்கும் எ.வ.வேலு!!

Author: Udayachandran RadhaKrishnan
4 September 2024, 12:03 pm

தமிழக பொதுப்பணித் துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் ஏ.வ வேலு களியக்காவிளை அருகே கோழி விளை பகுதியில் உள்ள சாலை மற்றும் மார்த்தாண்டம் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மேம்பாலம் மற்றும் சாலையை பார்வையிட்டார்.

தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் இந்த தேசிய நெடுஞ்சாலையில் 16 கிலோமீட்டர் தூர சாலை மிக மோசமாக உள்ளது. அதை உடனடியாக சீரமைக்கப்படும் மார்த்தாண்டத்தில் உள்ள மேம்பாலத்தை பொறுத்தவரையில் போக்குவரத்து இடையூறாக அணுகு சாலைகள் உள்ளது இந்த அணுகு சாலைகளில் போக்குவரத்து செல்ல முடியாத நிலை உள்ளது

எனவே இந்த பகுதியில் உள்ள சாலை அகலப்படுத்த உடனடியாக மாவட்ட ஆட்சியாளர் மூலம் நிலத்தை கையகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் இதற்காக அரசினுடைய அனுமதியும் விரைவில் வழங்கப்பட்டு இந்த சாலை விரைவில் விரிவாக்கம் செய்யப்படும்.

மலையோர பகுதிகளில் சாலை அமைக்கும் பொழுது இந்த சாலைகளில் உறுதித் தன்மை விரைவில் நாசமாவதால் இந்தப் பகுதிகளில் சாலை அமைப்பதற்கான காலக்கெடுவை குறைப்பதற்கான வாய்ப்புகள் ஆராயப்பட்டு வருகிறது. இதற்கான கோப்புகள் தயார் நிலையில் உள்ளது.

விரைவில் இதற்கான அனுமதி முதல்வரிடம் இருந்து பெறப்படும் பழனியில் முருகன் மாநாடு நடத்தியது குறித்து திராவிட கழகத் தலைவர் வீரமணி தொல் திருமாவளவன் இடதுசாரி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை பொருத்தவரையில் இந்த மாநாட்டிற்கு பல்வேறு மாநில அறிஞர்களை அழைத்து மாநாடு நடத்தப்பட்டது.

அவர்கள் பேசும்பொழுது பல்வேறு கருத்துகளை பேசி இருக்கலாம் ஆனால் அதே நேரத்தில் என்ன முடிவு எடுக்க வேண்டும் என்பதை தமிழக முதல்வர் தான் எடுப்பார் அதே நேரத்தில் திமுக மத நம்பிக்கை உள்ளவர்களுக்கும் மத நம்பிக்கை இல்லாதவர்களுக்கும் ஆன அரசாக செயல்படுகிறது எங்களைப் பொருத்தவரையில் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற நிலைப்பாட்டில் உள்ளோம்.

மேலும் மும்மொழி கொள்கையை எதிர்க்கும் திமுக அரசு திமுகவினர் நடத்தும் CBSCE பள்ளிகளை மூட வேண்டும் என எச். ராஜா கூறியது பற்றி பதில் அளிக்கையில் H. ராஜா என்ன கல்வி துறை அமைச்சரா? என ஏ .வ. வேலு மறு கேள்வி எழுப்பினார்.

ஆய்வு மற்றும் பேட்டியின் போது பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜேஷ்குமார் தாரகை கத்பட், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்

  • Telangana bans special shows சிறப்பு காட்சிக்கு END CARD…அல்லு அர்ஜுன் ஷாக்…பேரதிர்ச்சியில் சினிமா ரசிகர்கள்…!
  • Views: - 268

    0

    0