இன்னும் 3 நாட்களில் பிறந்தநாள்.. திடீரென மறைந்த பிரபல எழுத்தாளர்!

Author: Hariharasudhan
10 November 2024, 5:45 pm
Quick Share

மர்மதேசம் என்ற நூல் முதல் தேசிய விருது வென்ற படம் வரை தனது எழுத்துக்களால் எழுத்துலகை கட்டி ஆண்ட இந்திரா சௌந்தர்ராஜன் காலமானார்.

சென்னை: 1958ஆம் ஆண்டு பிறந்தவர் இந்திரா சௌந்தர்ராஜன். மதுரையில் வசித்து வந்த இவருடைய உண்மையான பெயர் சௌந்தர்ராஜன். பின்னாட்களில் எழுத்தின் மீது கொண்ட காதலால், தன்னுடைய தாயின் பெயரான ‘இந்திரா’வை தன் பெயருடன் சேர்த்து இந்திரா சௌந்தர்ராஜன் என்பதை தன் எழுத்துப் பெயராக மாற்றிக் கொண்டிருந்தார்.

முன்னதாக டிவிஎஸ் நிறுவனத்தில் துணைப் பொறியாளராக பணியாற்றிய இவர், தற்போதும் மதுரை டிவிஎஸ் நகர்ப் பகுதியில் வசித்து வந்தார். கடந்த 1978ஆம் ஆண்டு ‘ஒன்றின் நிறம் இரண்டு’ என்ற கதைக்காக கலைமகள் குறுநாவல் போட்டியில் முதல் பரிசை வென்றார். தொடர்ந்து, ‘என் பெயர் ரங்கநாயகி’ எனும் கதை தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 1999ஆம் ஆண்டுக்கான சிறந்த நூலிற்கான மூன்றாம் பரிசினையும் பெற்றது.

மேலும் இவர் புகழ்பெற்ற பல சிறுகதைகள், நாவல்கள், தொலைக்காட்சித் தொடர்கள் ஆகியவற்றை எழுதி உள்ளார். இதன்படி, என் பெயர் ரங்கநாயகி மற்றும் மர்ம தேசம் ஆகிய படைப்புகள் தொலைக்காட்சித் தொடர்களாகவும் வந்துள்ளன. மேலும், அத்திப்பூக்கள் என்ற தொடர் இவரது எழுத்தில் வெளி வந்த அழியாத தொடர் ஆகும். இந்நிலையில்தான், நேற்று மதுரையில் உள்ள தனது வீட்டின் குளியலறையில் வழுக்கி விழுந்து இந்திரா சௌந்தர்ராஜன் உயிரிழந்துள்ளார்.

Indira Soundar Rajan

66 வயதாகும் இந்திரா சௌந்தர்ராஜனின் திடீர் மறைவு எழுத்துலகிலும், திரையுலகிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும், மாவட்ட நிர்வாகம் சார்பில் அவருக்கு உரிய மரியாதை செலுத்துவதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகிறது. இதில் ஒரு சோகமான விஷயம் என்னவென்றால், நவம்பர் 13ஆம் தேதி அவரது பிறந்தநாள் வரும் நிலையில், நவம்பர் 10ம் தேதியான இன்று, அதாவது இன்னும் 3 நாட்களில் 66வது பிறந்தநாளை கொண்டாட வேண்டிய அவர் மறைந்திருப்பது, பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: டெல்லி கணேஷின் கடைசி நிமிடங்கள்.. மகன் உணர்வுப்பூர்வ பகிர்வு!

இந்த நிலையில், இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் பதிவில், ” “பிரபல எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் உயிரிழந்த செய்தியறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் வாசகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்” எனத் தெரிவித்துள்ளார்.

  • Napolean 6 மாதம் கழித்து மீண்டும் தனுஷுக்கு திருமணம் செய்வேன் – குண்டு தூக்கி போட்ட நெப்போலியன்!
  • Views: - 68

    0

    0

    Leave a Reply