பாதிக்கப்பட்ட மாணவியின் புகாரின் அடிப்படையில், ஞானசேகரன் போனில் சார் என அழைத்தது யார் என்பதை காவல்துறை இதுவரை வெளிப்படுத்தவில்லை என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சென்னை: சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகமான எம்.ஜி.ஆர் மாளிகையில், அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “உலக அளவிலே புகழ்பெற்ற பல்கலைக்கழகமான அண்ணா பல்கலைக்கழகத்தில், கடந்த டிசம்பர் 23ஆம் தேதி இரவு 7.45 மணியளவில், ஞானசேகரன் என்பவர் அத்துமீறி நுழைந்து, அந்த பல்கலைக்கழக வளாகத்தில் பேசிக் கொண்டிருந்த மாணவன் மற்றும் மாணவியைப் பார்த்துள்ளார்.
அப்போது, அந்த மாணவனை அடித்து உதைத்து, அங்கிருந்த மாணவியை பலவந்தமாக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்துள்ளார். இந்தச் செயல்பாட்டை செல்போனில் ஞானசேகரன் படம்பிடித்ததாகவும், பாதிக்கப்பட்ட மாணவி போலீசில் புகார் அளித்துள்ளார்.
பாலியல் சீண்டலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, ஞானசேகரனுக்கு செல்போன் அழைப்பு வந்துள்ளது. அதில் யாரிடமோ சார், சார் எனப் பேசியுள்ளார். அந்த சார் யார் என்பதை காவல்துறை இதுவரை வெளிப்படுத்தவில்லை. இந்த விவரங்கள் அனைத்தும் காவல் நிலையத்தில் மாணவி அளித்த புகாரில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஆனால், காவல் உயர் அதிகாரி, பாலியல் சீண்டலில் ஈடுபட்டது ஒருவர் தான். அவர் ஞானசேகரன் தான் என்கிறார். அப்படியெனில் போனில் சார், சார் என்று பேசியது யாரிடம்? அதுமட்டுமின்றி பல ஆயிரம் மாணவர்கள் படிக்கும் அண்ணா பல்கலைக்கழகத்தில், எப்படி அந்த நபர் சாதாரணமாக சுற்றித் திரிய முடிந்தது?
இதனால் பெற்றோர்கள் மிகவும் அச்சப்படுகின்றனர். அந்த பல்கலைக்கழகத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் 56 மட்டுமே இயங்குகின்றன, மற்றவை ஏன் இயங்கவில்லை. இப்படிப்பட்ட நிலையில்தான் அரசு செயல்படுகிறதா? இந்த ஞானசேகரன் ஒரு சரித்தரப் பதிவேடு குற்றவாளி.
இதையும் படிங்க: அமைச்சருக்கும், ஆணையருக்கும் முரண்பாடு.. யாரைக் காப்பாற்ற திமுக முயற்சிக்கிறது? அண்ணாமலை கேள்வி!
இப்படிப்பட்ட நபர் தங்குதடையின்றி அண்ணா பல்கலைக்கழகத்தில் சென்று வரும் நிலையிலா வைத்திருப்பது?. மேலும், காவல்துறை ஆணையர், 100க்கு புகார் வந்தவுடன் வழக்குப் பதிவு செய்யப்படுகிறது என்கிறார். ஆனால், இன்று, அந்த துறையின் அமைச்சர் சொல்கிறார், 100க்கு புகார் வரவில்லை என்று.
காவல் நிலையத்திற்கு நேரில் வந்துதான் புகார் அளித்ததாக முரண்பட்ட தகவலை அமைச்சர் கூறியிருக்கிறார். எனவே, உண்மை நிலையைத் தெரிந்து கொள்ள இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும்” என வலியுறுத்தி உள்ளார். மேலும், இந்த முரண்பட்ட தகவல்களுக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் கேள்வி எழுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
90களின் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் நடிகை சிம்ரன். இடையழகி என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட சிம்ரன், நடிப்பு திறமையால உச்சகட்ட நடிகையானார்.…
கோவை மாநகராட்சிக்கு சொந்தமான வெள்ளலூரில் 650 ஏக்கர் பரப்பளவு கொண்ட குப்பை கிடங்கு உள்ளது. இந்த குப்பை கிடங்கில் 253…
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
This website uses cookies.