சென்னை மேயராக பொறுப்பேற்கும் பட்டியலினத்தை சேர்ந்த பெண் இவரா? எகிறும் எதிர்பார்ப்பு!!!
Author: Udayachandran RadhaKrishnan23 February 2022, 11:21 am
தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கணிசமான இடங்களில் வென்று 21 மாநகராட்சியையும் கைப்பற்றியுள்ளது. இதில் சென்னை மாநகராட்சி மேயர் பதவி பட்டியலினத்தவருக்கு ஒதுக்கப்பட்டு திமுக வெற்றியும் கண்டுள்ளது.
உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு உறுதி செய்யும் வகையில் அங்கு 200 வார்டுகளில் 100 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டன. அத்துடன் சென்னை மேயர் பதவி பட்டியலினத்தவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில இந்த போட்டியில் திமுகவை சேர்ந்த 2 பெண்கள் உள்ளனர்.
இதில் ஆலந்தூர் மண்டலத்தில் 159வது வார்டில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் அமதபிரியா செல்வராஜ், கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட 70வது வார்டில் வென்ற ஸ்ரீதரணி ஆகியோர் இடையே கடும் போட்டி உண்டாகியுள்ளது.
இதில் முதலமைச்சர் தொகுதிக்குட்படட ஸ்ரீ தரணிக்கு அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில், அமைச்சர் மா சுப்பிரமணியத்தின் ஆதரவாளராக உள்ள அமுதபிரியாவுக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
வரும் மார்ச் 4ம் தேதி மேயரை தேர்ந்தெடுக்கும் மறைமுக தேர்தலில் இருவரில் யார் வெற்றி பெறுவார் என்று தெரிவிந்துவிடும்.