யார் அந்த SIR? தலைநகரைத் திணறடித்த அதிமுக.. முக்கியமான விஷயமும் இருக்கு!

Author: Hariharasudhan
29 December 2024, 11:27 am

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணையில் உள்ள நிலையில், ‘யார் அந்த சார்’ என்ற வாசகத்துடன் அதிமுக சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

சென்னை: கடந்த டிசம்பர் 23ஆம் தேதி இரவு, சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து வரும் மாணவி, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த வழக்கில், அருகில் பிரியாணி கடை நடத்தி வந்த ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனிடையே, பாதிக்கப்பட்ட மாணவி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை கசிந்தது. அந்த FIR-இல், பாதிக்கப்பட்ட மாணவியிடம் ஞானசேகரன் பேசிக் கொண்டு இருந்தபோது, திடீரென செல்போனில் ஒருவரிடம் பேசினார் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அது மட்டுமல்லாமல், உனக்கு 3 வாய்ப்புகள் வழங்குகிறேன், முதலாவது பல்கலை டீனிடம், நீயும், உனது ஆண் நண்பரும் இருந்த வீடியோவைக் காண்பிப்பேன், இரண்டாவது நான் சொல்வதை நீ கேட்க வேண்டும், மூன்றாவது, அந்த சார் சொல்வதைக் கேட்க வேண்டும் என ஞானசேகரன் மாணவியிடம் கூறியதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

Who is SIR AIADMK Posters creates Political Stir

எனவே, அந்த சார் யார் என்றும், ஞானசேகரன் போனில் பேசியது யார் என்றும் கேள்வி எழுந்தது. ஆனால், பாதிக்கப்பட்ட மாணவியிடம் பேசிக் கொண்டிருந்தபோது ஞானசேகரனின் மொபைல் போன் Flight Mode-இல் இருந்ததாகவும், எனவே ஞானசேகரன் மட்டுமே இதில் சம்பந்தப்பட்டு உள்ளார் என்றும் காவல் துறை தரப்பில் நீதிமன்றத்திலே தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: வேலையை விட்ட நிதிஷ் குமார் ரெட்டியின் தந்தை.. ஆந்திர அரசு கொடுத்த அதிர்ச்சி!

இருப்பினும், ஞானசேகரன் குறிப்பிட்ட அந்த சார் யார் என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை. இந்த நிலையில், ’யார் அந்த SIR? #Save Our Daughters” என்ற வரிகள் உடன் சென்னை முழுவதும் அதிமுக சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டு உள்ளது. இது தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • taapsee pannu said to vetrimaaran that one national award is pending for her என்னைய தவிர எல்லாத்துக்கும் நேஷனல் அவார்டு- வெற்றிமாறனுக்கு சங்கடத்தை ஏற்படுத்திய நடிகை…