யாரு சொன்னாங்க ஆபத்து வரும்னு? புழல் ஏரியால் ஆபத்து வராது.. வராது : அமைச்சர் துரைமுருகன் உறுதி!!

Author: Udayachandran RadhaKrishnan
7 December 2023, 2:23 pm

யாரு சொன்னாங்க ஆபத்து வரும்னு? புழல் ஏரியால் ஆபத்து வராது.. வராது : அமைச்சர் துரைமுருகன் உறுதி!!

சென்னை புழல் நீர்த்தேக்கத்தில் நீர் வரத்து கனமழை காரணமாக கடல் அலை போல அலை அடித்ததால் பலவீனமான கரைப்பகுதிகளில் மண்ணரிப்பு ஏற்பட்டு சேதம் அடைந்துள்ளதால் கரை உடையும் அபாய நிலையில் உள்ளது.

அங்கு பொதுப்பணித்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் கரையில் தொடர்ந்து நீர்வரத்து குறைந்துள்ளதால் அப்பகுதியில் மணல் மூட்டைகளை அடுக்கி வைத்து தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

இந்த நிலையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிரபுசங்கர் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி சட்டமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற உறுப்பினர் ஆகியோருடன் ஆய்வு செய்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் நீர் இருப்புகள் குறித்தும் நீர் தேக்க பாதுகாப்புகள் குறித்தும் விவரங்களை கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் புழல் நீர்த்தேக்கத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை,நீர்த்தேக்கத்தில் அதிக அளவு நீர்வரத்து வந்ததால் கடல் அலை போன்று எழும்பி வெளியேறியதால் கரை பகுதியில் லேசாக சேதம் அடைந்ததாகவும் ஆனால் அதனால் எந்த ஆபத்தும் கிடையாது என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

பின்னர் பூண்டி நீர்த்தேக்கத்தை ஆய்வு செய்ய அமைச்சர் அங்கிருந்து புறப்பட்டார். முன்னதாக அவர் அங்குள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள பொது மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.

  • ajith kumar receive padma bhushan award from president நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!