சிறுவனை புகை பிடிக்க வைத்த 4 பேர் கைது : கோவையில் போலீசார் அதிரடி

Author: Babu Lakshmanan
15 February 2022, 11:18 am

கோவை: குனியமுத்துாரில், சிறுவனை புகைபிடிக்க வைத்த நால்வரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை, கரும்புக்கடையை சேர்ந்தவர் அக்பில் அகமதுஷா (19). இவரது உறவினரான 10 வயது சிறுவன், குறிச்சி குளம் சிமென்ட் சாலையில் விளையாடிக் கொண்டிருந்தான். அங்கு விளையாடிக் கொண்டிருந்த முகமது அப்சல் உள்ளிட்ட 10 பேர், சிறுவனை புகை பிடிக்குமாறு கட்டாயப்படுத்தியுள்ளனர்.

இது பற்றி அறிந்த அக்பில் அகமதுஷா, தவறு செய்த வாலிபர்களை தட்டிக்கேட்டார். ஆத்திரம் அடைந்த வாலிபர்கள், அகமதுஷாவை சரமாரியாக அடித்து உதைத்தனர். இதுகுறித்து விசாரித்த குனியமுத்துார் போலீசார் முகம்மது அப்சல் உள்ளிட்ட 4 பேரை கைது செய்துள்ளனர்.

  • vadivelu trying to hit the car of goundamani and senthil car கவுண்டமணியின் காரை இடிக்க வந்த வடிவேலுவின் கார்! இப்படியெல்லாம் நடந்துருக்கா?