தமிழகத்தின் அடுத்த ஆளுநர் யார்..? 4 நாள் பயணமாக டெல்லி சென்ற ஆர்.என்.ரவி. வெளியாகும் முக்கிய அறிவிப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
1 August 2024, 12:45 pm

தமிழ்நாட்டின் கவர்னராக ஆர்.என்.ரவி கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பரில் பொறுப்பேற்றார். அதற்கு முன்பு அவர் நாகலாந்து கவர்னராக இருந்தார். இவரின் பதவிக்காலம் நேற்றுடன் நிறைவடைந்தது.

இதனால் இவருடைய பதவி நீட்டிக்கப்படுமா? அல்லது வேறொருவர் புதிதாக நியமிக்கப்படுவாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில், 4 நாள் பயணமாக ஆளுநர் ஆர்என் ரவி டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார்.

பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரை கவர்னர் ஆர்.என்.ரவி சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், அவர் வரும் 4-ந்தேதி மீண்டும் தமிழகம் திரும்புவார் என்று கூறப்படுகிறது. இதனிடையே, தமிழக கவர்னராக ஆர்.என்.ரவியே தொடருவார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

  • Anitha Vijayakumar Viral Video நடிகர் விஜயகுமாரின் மகள் அனிதாவின் உருக்கமான பகிர்வு…வைரலாகும் வீடியோ!