டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பாஜக பெரும்பானமையைப் பெற்று வரும் நிலையில், காங்கிரஸ் ஒரு இடத்தில்கூட முன்னிலை பெறவில்லை.
டெல்லி: 2025, டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் விறுவிறுப்பாக எண்ணப்பட்டு வருகின்றன. 70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற 36 தொகுதிகளில் வெற்றி பெறுவது அவசியம். ஆனால், இந்தப் பெரும்பான்மயைத் தாண்டி பாஜக சென்று கொண்டிருக்கிறது.
இதன் மூலம், கிட்டத்தட்ட 27 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லியில் பாஜக ஆட்சி அமைக்க உள்ளது. ஆனால், தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெற்ற ஆம் ஆத்மி தற்போதைய நிலவரப்படி எதிர்கட்சி வரிசையில் அமர இருக்கிறது. அதேநேரம், தேசியக் கட்சியான காங்கிரஸ் தொடர்ந்து மூன்றாவது முறையும் ஒரு இடங்களில் கூட வெல்ல முடியாத நிலையில் உள்ளது. என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. டெல்லி சட்டசபை தேர்தல் 2013:
2013, 2015, 2020 டெல்லி தேர்தல் களம்: ஏனென்றால், கடந்த 2013ஆம் ஆண்டு டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பாஜக 31 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆம் ஆத்மி 28 தொகுதிகளிலும், காங்கிரஸ் 8 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. ஆனால், ஆட்சி அமைக்க 36 தொகுதிகள் தேவை என்பதால், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. எனவே, ஆம் ஆத்மி – காங்கிரஸ் கட்சிகள் கைகோர்த்து, காங்கிரஸ் ஆதரவுடன் ஆம் ஆத்மி முதல் முறையாக ஆட்சி அமைத்தது.
இதனையடுத்து, கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி, மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 67 இடங்களில் மகத்தான வெற்றியைப் பெற்றது. ஆனால், பாஜக வெறும் மூன்று தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. அதைவிடக் கொடுமையாக, காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.
இதையும் படிங்க: வெங்காயத்தால் ஆட்சியை இழந்த பாஜக.. மதுவால் மீண்டும் டெல்லியை சாத்தியமாக்கியது எப்படி?
அதேபோல், 2020 சட்டமன்றத் தேர்தலிலும் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மியே வெற்றியைப் பெற்றது. ஆளும் கட்சியாக இருந்தாலும், எதிர்ப்பு அலைகளைச் சமாளித்து 62 தொகுதிகளில் ஆம் ஆத்மியால் வெற்றி பெற முடிந்தது. அப்போது, பாஜக 8 தொகுதிகளில் வென்றது. ஆனால், அப்போதும் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மனம் உடைஞ்ச சல்மான்கான் பாலிவுட் நடிகர் சல்மான் கான் கடந்த 35 ஆண்டுகளாக இந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறார்.…
மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போது முதல்வர் மு.க. ஸ்டாலின்,கோவையில் உலகத் தரம் வாய்ந்த சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கப்படும் என்று…
வீடீயோவை தேடி பார்ப்பவர்களுக்கு எச்சரிக்கை சமீபத்தில் சமூக வலைதளங்களில் நடிகை ஸ்ருதி நாராயணனைப் பற்றிய ஆபாச வீடியோ ஒன்று வெளியானது.…
விருதுநகர், மல்லாங்கிணறு பகுதியில் தாயுடன் தகாத உறவில் இருந்த நபரைக் குத்திக்கொலை செய்த மகன் உள்பட இருவரை போலீசார் கைது…
காசநோயால் அவதி தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகையாக 1980 மற்றும் 90-களில் விளங்கிய சுஹாசினி,தமிழ் மட்டுமின்றி தெலுங்கு,மலையாளம்,கன்னடம் ஆகிய மொழிப்படங்களிலும்…
காங்கிரஸ், திமுகவுக்கு விஜய் தண்ணீர் காட்ட வேண்டும், பாஜகவுக்கு அல்ல என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். டெல்லி:…
This website uses cookies.