நடிகையிடம் வசமாக சிக்கி இருக்கும் அந்த ஆதாரம்.? தனுஷ் அமைதி காக்க இது தான் காரணமா இருக்குமோ.?

Author: Rajesh
23 June 2022, 3:57 pm

பிரபல பாடகி, ஆர்ஜே, தொலைக்காட்சி தொகுப்பாளர், நடிகை என பல முகங்களை கொண்டவர் சுசித்ரா. தமிழ் சினிமாவில் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுச்சி லீக்ஸ் என்ற பெயரில் சினிமா பிரபலங்களின் அந்தரங்க வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இதனால் தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதன்பிறகு சுசித்ரா மனநிலை பாதிக்கப்பட்டுள்ளார் என்று தகவல் பரவியது.

இதனிடையே, சமீபத்தில் தனக்கு மனநிலை சரியில்லை என கூறி பயில்வான் ரங்கநான் வெளியிட்ட வீடியோவை பார்த்து கடுப்பான சுசித்ரா, தன்னைப் பற்றி பேச சொன்னது தனுஷ் தானே என்றும் தனுஷ் எவ்வளவு பணம் கொடுத்தார் என்று கேட்டும் விளாசினார். மேலும் தன்னிடம் சில வீடியோக்கள் இருக்கிறது, அதைப்பற்றியும் பேசுங்கள் என்றும் கூறி திணற வைத்தார். அவர் பேசிய ஆடியோக்கள் இணையத்தில் பெரும் வைரலானது.

இந்த விவகாரத்தில் தனுஷின் பெயர் அடிப்பட்டது, அவரது ரசிகர்களுக்கு பெரும் சினிமா துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் தனுஷ் இதுகுறித்து எதுவும் பேசாமல் அமைதி காத்து வருகிறார். தனுஷின் இந்த அமைதிக்கு காரணம் அவர் குறித்த ஏதோ ஒரு ஆதாரம் சுச்சியிடம் இருப்பதுதான் என கூறப்படுகிறது.

ஏற்கனவே நடிகைகளுடன் தனுஷ் நெருக்கமாக இருந்ததால்தான் ஐஸ்வர்யாவுக்கும் அவருக்கும் பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்பட்டது. மேலும் இந்த விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்த் தலையிட்டு தனுஷை எச்சரித்ததாகவும் கூறப்பட்டது. இதனால் தற்போது விவாகரத்து வரை சென்றுள்ளனர் தனுஷும் ஐஸ்வர்யாவும். இந்நிலையில் சுச்சியுடன் மல்லுக்கட்டினால் வீடியோ ஆதாரங்கள் வெளியாகி கெரியருக்கு வேட்டு வைத்துவிடும் என்ற பயத்தினால் தான் தனுஷ் எதுவும் பேசாமல் உள்ளார் என கூறப்படுகிறது.

  • actress who starred with Ajith and Vijay is in a pathetic state படுக்கைக்கு அழைத்த நண்பர்கள்.. அஜித், விஜயுடன் நடித்த நடிகையின் பரிதாப நிலை!