திமுக கூட்டணியின் 39 எம்பிக்கள் கூட்டத்தில் ஜேபி நட்டா பங்ககேற்றது ஏன்? மர்மத்தை விளக்குவாரா CM? ஆர்பி உதயகுமார்!
Author: Udayachandran RadhaKrishnan20 August 2024, 2:38 pm
மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் “கலைஞர் நாணயம் வெலியீடு நிகழ்வில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கலைஞரை புகழ்ந்து பேசியதால் எனக்கு தூக்கம் வரவில்லை என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழக அமைச்சர்கள் கண்ணா பின்னா என பேசுவதால் எனக்கு தூக்கம் வரவில்லை என முதல்வர் ஏற்கனவே கூறியுள்ளார்.
கலைஞர் நினைவு நாணயம் வெளியீட்டு விழாவில் யாருக்கும் எந்தவொரு வருத்தமுமில்லை, நாடாளுமன்ற தேர்தலில் மோடி ஆட்சிக்கு வர கூடாது என மேடைக்கு மேடை முதல்வர் ஸ்டாலின் பேசினார்,
கலைஞர் நாணயம் வெளியீடு விழா மத்திய அரசு நிகழ்ச்சி, அதனால் ராகுல் காந்தி, சோனியா காந்தி, கார்கே ஆகியோரை அழைக்க முடியவில்லை என முதல்வர் கூறியுள்ளார்.
ஆனால் மாநில அரசு நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ் வெளியீட்டு விழாவை நடத்தியுள்ளது, மத்திய அரசு நிகழ்ச்சி என மாநில அரசு முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் செயலில் ஈடுபட்டுள்ளது.
விழா குறித்து கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிச்சாமியை பார்த்து மூளை இருக்கிறதா? என முதல்வர் கேலியும், கிண்டலும் செய்துள்ளார். மத்திய அரசு விழாவா? மாநில அரசு விழாவா? என்பது கூட தெரியாத முட்டாள் முதல்வரை பெற்று இருக்கிறோம் என தமிழக மக்கள் வேதனையில் உள்ளனர்.
திமுகவின் ஊழல் ஆட்சியை நாடே அறிந்து இருக்கிறது, ஆனால் நிகழ்ச்சியில் கலைஞரை திமுகவினரை விட ராஜ்நாத் சிங் புகழ்ந்து பேசி உள்ளார். பாசிச ஆட்சி தமிழகத்தில் இடமில்லை என சொன்ன முதல்வர் தந்தையின் நாணயத்தை வெளியிட தனது நாணயத்தை அடமானம் வைத்து விட்டார்.
கலைஞருக்கு புகழ் சேர்க்க வேண்டும் என்பதற்காக முதல்வர் தமிழ் இனத்தை அடமானம் வைத்து விட்டார், மூளை இருக்கிறதா என கேட்கும் முதல்வருக்கு மூளை இருக்கிறதா?, ஜெயலலிதா மறைவிற்கு அதிமுக நினைவு கூட்டத்தை நடத்தி உள்ளதா? என முதல்வர் பேசியுள்ளார்.
ஜெயலலிதாவிற்கு நினைவிடம், திருக்கோவில் உள்ளிட்டவைகள் அமைக்கப்பட்டுள்ளது, சந்தேகம் இருந்தால் மதுரைக்கு வரும் முதல்வர் அம்மா திருக்கோவிலுக்கு வரலாம்.
கலைஞர் நாணய வெளியிட்டு விழாவில் மூலம் மத்திய அரசிடம் முதல்வர் மாநில வளர்ச்சிக்கு ஏன் நிதி கேட்கவில்லை, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை தரம் தாழ்ந்து விமர்சனம் செய்துள்ளார், முதல்வர் தரம் தாழ்ந்து விமர்சனம் செய்வதை நிறுத்தி கொள்ள வேண்டும்.
திமுக – பாஜக கூட்டணியை வெளிப்படையாக அறிவித்து விடலாமே?, திமுக பாஜகவுடன் கள்ள உறவு வைத்தது தெரிந்து விட்டதால் முதல்வர் உளறி வருகிறார்.
எடப்பாடி பழனிச்சாமியை விமர்சனம் செய்த முதல்வர் தனது பேச்சை வாபஸ் பெற வேண்டும், விழாவின் மேடைக் காட்சிகளை பார்க்கும் போது பாஜகவை தமிழகத்திற்க்குள் விட மாட்டேன் என கூறிய முதல்வர் ஸ்டாலின் நாணயம் வெளியீட்டு விழாவின் மூலம் பாஜகவை சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்றுள்ளார்.
Go Back Modi என கூறிய முதல்வர் ஸ்டாலின் தற்போது Welcome Modi என வரவேற்க்கிறார், நாணயத்தில் இந்தி மொழி இடம்பெற்றுள்ளது குறித்து எடப்பாடி பழனிச்சாமி கேள்விக்கு முதல்வரால் பதில் சொல்ல வக்கு உள்ளதா? திராணி உள்ளதா?
திமுக கூட்டணியின் 39 நாடாளுமன்ற உறுப்பினர் பங்கேற்ற கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் நட்டா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டதன் மர்மம் ஏன்ன? கலைஞர் நாணயம் வெளியீட்டு விழாவை மட்டுமே வைத்து பேசவில்லை, தொடர் நிகழ்வை வைத்து தான் பேசுகிறோம்.
திமுக – பாஜக உறவை புதுப்பித்து கொள்ள வேண்டியது தானே? தமிழக மக்களை ஏமாற்றாமால் திமுக – பாஜக கூட்டணியை அறிவித்து விட வேண்டியது தானே?, திமுக – பாஜக உறவின் மூலம் திமுக ஆட்சியை காப்பற்றவும், உதயநிதியை துணை முதல்வராக்கவும் திமுக கூட்டணி கட்சிகளை கைவிட்டுள்ளது, திமுகவை அழிக்க நினைத்த அண்ணாமலை கலைஞர் நினைவிடத்தில் கும்பிடு போட்டு கொண்டு இருக்கிறார், அண்ணாமலைக்கு இன்னும் அரசியல் அனுபவம் தேவைப்படுகிறது” என கூறினார்.