சவுக்கு சங்கர் கையில் கட்டுடன் வந்தது ஏன்? உடல்நிலை குறித்து அறிக்கை அனுப்புங்க.. கோர்ட் போட்ட ஆர்டர்!
Author: Udayachandran RadhaKrishnan8 May 2024, 7:28 pm
சவுக்கு சங்கர் கையில் கட்டுடன் வந்தது ஏன்? உடல்நிலை குறித்து அறிக்கை அனுப்புங்க.. கோர்ட் போட்ட ஆர்டர்!
மகளிர் போலீசார் குறித்து அவதூறாக பேசியதாக சவுக்கு சங்கர் கைது செய்யப்ப்டடார். தேனியில் கைது செய்யப்படட அவர் கோவைக்கு அழைத்து வரும் போது போலீஸ் வாகனம் விபத்துக்குள்ளானது.
இந்த நிலையில் சவுக்கு சங்கர் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்திருந்த நிலையில், அவருக்கு நீதிமன்றம் நீதிமன்றகாவல் அளித்து உத்தரவிட்டது. சிறைக்கு கொண்டு செல்லும் வழியில் அவரது உடலில் காயம் ஏதும் ஏற்படவில்லை.
சிறையில் வைத்து சித்ரவதை செய்ததாகவும் சவுக்கு சங்கர் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. சிறையில் சவுக்கு சங்கர் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டது தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிடக்கோரி அவரது தாயார் கமலா தொடர்ந்திருந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் நாளைக்கு ஒத்திவைத்துள்ளது.
மேலும் படிக்க: ஜிகே வாசனுக்கு டாட்டா காட்டிய மாவட்ட செயலாளர்.. கூண்டோடு அதிமுகவில் இணைந்த த.மா.கா நிர்வாகிகளால் TWIST..!
மேலும், சவுக்கு சங்கரின் உடல்நிலை குறித்த அறிக்கையை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவிடம் பெற்று தாக்கல் செய்ய பதிவுத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கஞ்சா வழக்கு தொடர்பாக சவுக்கு சங்கர் இன்று மதுரை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். சவுக்கு சங்கருக்கு மே 22-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மகளிர் போலீசார் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் மே 17-ந்தேதி வரை நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இன்று கஞ்சா வழக்கில் ஆஜர்படுத்த மதுரை அழைத்துச் செல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
நல்ல ஆரோக்கியமான நிலையில் உள்ள சங்கரை மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான தனிப்பிரிவில் அடைத்துள்ளனர். சிறையில் அடைக்கும் முன் அவரது உடலில் எவ்வித பாதிப்பும் இல்லை. தற்போது, அவரது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது என அவரது வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் கூறியிருந்தார்.அதை மறுத்துள்ள சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. மகேஸ்வர் தயாள், சிறையில் அவரை யாரும் தாக்கவில்லை என்று விளக்கம் அளித்திருந்தார் என்பது குறிப்படத்தக்கது.