இவ்ளோ நாள் வராம இப்ப மட்டும் ஏன் வந்தீங்க? நான்கரை ஆண்டு கழித்து தொகுதிக்கு வந்த ஜோதிமணி.. அதிமுக சரமாரிக் கேள்வி.. வெளியேறியதால் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
18 November 2023, 8:58 am

இத்தனை நாள் வராம இப்ப மட்டும் ஏன் வந்தீங்க? நான்கரை ஆண்டு கழித்து தொகுதிக்கு வந்த ஜோதிமணிக்கு அதிமுக சரமாரிக் கேள்வி!!

கரூர் மாநகராட்சியை ஒட்டிய காதப்பாறை பஞ்சாயத்துக்கு உட்பட்ட வெண்ணைமலை பாலதண்டாயுதபானி கோவில் முன்புறம் சுமார் 50 லட்சம் மதிப்பீட்டில் அம்மா பூங்கா கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் கட்டி முடிக்கப்பட்டது.

ஆட்சி மாற்றத்திற்கு பிறகு அந்த பூங்கா திறக்கப்படாமல் பூட்டியே இருக்கிறது. இந்நிலையில் இப்பூங்கா திறப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.


இதில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், பஞ்சாயத்து தலைவர், அறநிலையத்துறை அதிகாரி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

பூங்கா பராமரிப்புக்கு ஆகும் தொகையை யார் கொடுப்பது என்றும், அதற்கான ஓப்பன் டெண்டர் வைக்கப்பட்டும் ஒருவர் கூட வரவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் அந்த பூங்காவை எம்.பி ஜோதிமணி அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அங்கு வந்த அதிமுகவினர் நான்கரை ஆண்டுகளாக நன்றி சொல்லக் கூட வரவில்லை என்றும், இந்த பூங்கா பூட்டப்பட்டு இரண்டரை ஆண்டுகள் ஆகியும் வராமல் தற்போது எதற்காக வந்தீர்கள் என கேள்வி எழுப்பியதால் காரில் ஏறி பறந்து சென்றார். அவரை பின் தொடரந்து அதிமுக ஒன்றிய கவுன்சிலர் தமிழ் கேள்விகளை கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?