வாக்களிக்க ஜோதிகா ஏன் வரல? INSTAGRAM பதிவால் சூர்யாவுக்கு ஏற்பட்ட தலைவலி… நெட்டிசன்கள் விளாசல்!!

Author: Udayachandran RadhaKrishnan
21 April 2024, 2:47 pm

வாக்களிக்க ஜோதிகா ஏன் வரல? INSTAGRAM பதிவால் சூர்யாவுக்கு ஏற்பட்ட தலைவலி… நெட்டிசன்கள் விளாசல்!!

தமிழகத்தில் 39 லோக்சபா தொகுதிகளுக்கான தேர்தல் நேற்று முன் தினம் நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் வாக்களிக்க காலை முதலே பொதுமக்கள், பிரபலங்கள், அரசியல்வாதிகள் என அனைவரும் ஆர்வத்துடன் வந்து வாக்குகளை செலுத்தினர்.

இந்த முறை தமிழகத்தில் 69 சதவீதம் மட்டுமே வாக்குகள் பதிவாகியிருந்தன. பல்வேறு நடிகர் நடிகைகளை தங்களின் படப்பிடிப்பை கூட ரத்து செய்துவிட்டு ஜனநாயக கடமையை ஆற்றினார்கள்.

இது போல் நடிகர் சூர்யா, அவருடைய சகோதரர் கார்த்தி ஆகியோரும் வாக்களிக்க வந்தனர். அப்போது ஜோதிகா வரவில்லை, செய்தியாளர்களை சந்தித்த போது ஜனநாயக கடமையை ஆற்றிவிட்டேன். மற்றவர்களும் ஜனநாயக கடமையை ஆற்றவேண்டும் என்றார். அப்போது செய்தியாளர்கள் “ஜோதிகா மேடம் வாக்களிக்க வரவில்லையா” என கேட்டனர்.

மேலும் படிக்க: எதிர்காலத்துக்கான புதிய பயணம் தொடரும்… டெல்லி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வைத்த நம்பிக்கை!!

ஆனால் சூர்யா, அந்த கேள்விக்கு எந்த பதிலையும் அளிக்காமல் அவர் அந்த இடத்தை விட்டு சென்றுவிட்டார். இதனால் ஜோதிகா ஏதாவது படப்பிடிப்பில் இருந்திருப்பார். அதனால் அவர் வர முடியாத சூழல் உண்டாகியிருக்கும் என மக்கள் சமாதானப்படுத்திக் கொண்ட நிலையில் இன்ஸ்டா பேஜில் ஜோதிகா ஒரு குண்டை தூக்கி போட்டார்.

அதாவது நேபாளுக்கு சுற்றுலா சென்றுள்ளை வீடியோவாக போட்டுள்ளார். இதனால்தான் அவர் வாக்களிக்க வரவில்லை என தெரிகிறது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் இந்திய குடிமகளாக இருந்துக் கொண்டு வாக்களிப்பதை விட டூர்தான் முக்கியமா என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் ஜனநாயக கடமையாற்றுங்கள் என ஊருக்கு உபதேசம் செய்துவிட்டு சூர்யா வீட்டிலேயே இப்படி ஒருவர் ஓட்டு போடாமல் இருப்பது பெரும் அதிர்ச்சியை தருகிறது. ஒரு வேளை நேபாளம் செல்ல முன்கூட்டியே திட்டமிட்டு டிக்கெட்டை புக் செய்துவிட்டாரோ என்னவோ தெரியவில்லை. மேலும் அவர் தபால் வாக்குகளையாவது அளித்தாரா என்பதும் தெரியவில்லை.

  • Allu Arjun press meet emotional statement நானும் ஒரு குழந்தைக்கு அப்பா தான்..கண்ணீரோடு பேட்டியளித்த அல்லு அர்ஜுன்..!
  • Views: - 249

    0

    0