பல கட்சிகளில் இருந்து அழைப்பு.. திமுகவுக்கு டிக் அடித்த திவ்யா சத்யராஜ்!

Author: Hariharasudhan
19 January 2025, 3:24 pm

அப்பாவுக்கு தான் அரசியலுக்கு வருவதில் விருப்பமில்லை எனவும், ஆனால் தனக்கு அரசியலில் விருப்பம் உள்ளதாகவும் திமுகவில் இணைந்த திவ்யா சத்யராஜ் கூறியுள்ளார்.

சென்னை: பிரபல நடிகர் சத்யராஜின் மகளும், ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ், இன்று திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

மேலும், இது தொடர்பாக திமுக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழக முதல்வர், திமுக தலைவர் முன்னிலையில், இன்று (19.1.2025) காலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில், நடிகர் சத்யராஜின் மகளும், ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ் திமுகவில் இணைந்தார்” எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், இது தொடர்பாக பிரபல ஊடகத்திற்கு பேட்டி அளித்துள்ள திவ்யா சத்யராஜ், “2024 மக்களவைத் தேர்தலின் போது சில கட்சிகளிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது. ஆனால், அந்தக் கட்சி எதுவென்று இப்போது சொல்ல வேண்டாம். மக்கள் பணி செய்வதற்காகவே திமுகவில் இணைந்துள்ளேன்.

Divya Sathyaraj joined DMK

பதவி ஆசை எனக்கு கிடையாது. அரசியலில் என்னுடைய ரோல் மாடல் கருணாநிதி தான். அரசியலுக்கு வர வேண்டும் என்பது கல்லூரிக் காலத்தில் இருந்தே என்னுடைய ஆசை. அம்மாவை கவனித்துக் கொள்ள வேண்டியது இருந்ததால், முன்னரே அரசியலுக்கு வரவில்லை.

இதையும் படிங்க: மீண்டும் ‘அதை’ செய்யவா? அலறவிடும் அண்ணாமலை!

திமுக ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் கட்சி. பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் கட்சி என்பதால், அதில் இணைந்துள்ளேன். அப்பாவுக்கு நான் அரசியலுக்கு வருவதில் விருப்பமில்லை. எனக்கு அரசியலில் விருப்பம் உள்ளது” எனத் தெரிவித்து உள்ளார்.

  • உன்னை நீயே நம்பு போதும்.. தெறிக்கும் வரிகளில் வெளியான Vidaamuyarchi Second single!
  • Leave a Reply