தேவையில்லாம எங்களை ஏன் இழுக்கறீங்க..? காவல்துறைக்கு குட்டு வைத்து சி.வி. சண்முகத்திற்கு சிக்னல் காட்டிய நீதிமன்றம்!!!
Author: Udayachandran RadhaKrishnan20 July 2023, 5:02 pm
அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் மீதான 6 வழக்குகளை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 6 வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாததை சுட்டிக்காட்டி அந்த வழக்குகளை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்.
சிவி சண்முகம் மீதான இரு வழக்குகளில் 6 வாரங்களில் காவல்துறை பதிலளிக்க வேண்டும் எனவும் சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசை கண்டித்து போராடியதால் தன் மீது பதிவான வழக்குகளை ரத்து செய்யக்கோரி சி.வி.சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இவ்வழக்கு விசாரணையின்போது, சி.வி.சண்முகம் மீதான 6 வழக்குகள் ரத்து செய்யப்பட்டது.
மேலும், நீதிபதிகள் கூறுகையில், அரசியல் போராட்டங்களில் தேவையில்லாமல் ஏன் நீதித்துறையை இழுக்கிறீர்கள்? என சி.வி.சண்முகம் பேச்சைச் சுட்டிக்காட்டி நீதிபதி கேள்வி எழுப்பினார்.
மேலும், எந்த கட்சி என நீதிமன்றங்கள் பார்ப்பதில்லை, நீதித்துறையை பொறுத்தவரை ஒரே ஒரு அரசுதான். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது விவகாரத்தில் நீதிபதி அச்சுறுத்தப்பட்டார், மிரட்டப்பட்டார் என சண்முகம் பேசியிருந்தார் எனவும் நீதிபதி அதிருப்தி தெரிவித்தார்.