போஸ்டர்லயே இவ்வளவு Violence எதுக்கு? முந்திக்கொண்டு கருத்து சொன்ன Blue Sattai Maran. பதிலடி கொடுக்கும் ரசிகர்கள்.!
Author: Rajesh17 June 2022, 4:11 pm
கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் ஆகிய படங்களை இயக்கிய நெல்சன், அடுத்ததாக ரஜினியின் தலைவர் 169 படத்தை இயக்க ஒப்பந்தமானார். கடந்த பிப்ரவரி மாதம் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதன்படி சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க உள்ளதாகவும், அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், தற்போது தலைவர் 169 படத்தின் டைட்டில் மற்றம் போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி இப்படத்திற்கு ஜெயிலர் என பெயரிடப்பட்டு உள்ளதாக அறிவித்துள்ளனர். இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஓய்வு பெற்ற ஜெயிலர் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டைட்டில் லுக் உடன் வந்த போஸ்டரில் இரத்தக் கறையுடன் கூடிய கத்தி ஒன்றும் இடம்பெற்றிருந்தது.
இந்நிலையில், சர்ச்சைக்குரிய சினிமா விமர்சகரும், இயக்குனருமான ப்ளூ சட்டை மாறன், முன்னணி நடிகர்களின் பட போஸ்டர்கள் சிலவற்றை வெளியிட்டு கடுமையாக சாடி உள்ளார். அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது : போஸ்டர்களில் ஆக்ரோஷமான முகம், ரத்தம், சிகரெட், போதைப்பொருள், துப்பாக்கி, கத்தி போன்றவற்றை போட்டு இந்த நடிகர்கள் வேண்டுமென்றே 2கே பூமர்களை தவறாக வழிநடத்துகிறார்கள்.
These actors are intentionally misleading the 2K boomers with the posters with violent faces, blood, cigarette, drugs, guns and knifes soaked in blood.
— Blue Sattai Maran (@tamiltalkies) June 17, 2022
We can expect atleast 100 posters in near future. Great social responsibility.. especially from actors like Surya. pic.twitter.com/lGXVf90BJX
இன்னும் எதிர்காலத்தில் இதுபோன்ற நூற்றுக்கும் மேற்பட்ட போஸ்டர்கள் வரலாம். நல்லா இருக்குயா உங்க சமூக அக்கறை… குறிப்பாக சூர்யா போன்ற நடிகர்கள் இதில் இருப்பது வருத்தமாக உள்ளது” என காட்டமாக பதிவிட்டுள்ளார். இவரது பதிவிற்கு நெட்டிசன்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
கருத்து சொன்னா கருத்து சொல்லி சாவடிக்கிறாங்கனு சொல்ற இப்பிடி படம் பண்ணா society ய கெடுக்குறாங்கனு சொல்ற டேய் மென்டல் தாய்லி உனக்கு எப்டி தான்டா படம் வேணும் pic.twitter.com/58EXrFoMrx
— மஹாநதி™ (@iamThalapathyYn) June 17, 2022
அண்ணே அண்ணே சினிமாவ பாத்து கெட்டுப் போறவன் கெட்ட சீரழிஞ்சு போகட்டும்,. சினிமாவுல நல்லது சொன்னா மட்டும் அத கேட்டு திருந்திடவா போறானுங்க இல்ல சொன்னா கேக்க போறானுங்களா ?
— Garudan (@GarudanTweetz) June 17, 2022
உங்களையும் தான் பல வருஷமா ரிவியூ பண்ணறது தப்புனு சொல்லுறாங்க நீங்க என்ன பண்ணாமலா இருக்கீங்க ?