எதுக்கு இந்த பாராட்சம்.. கூட்டணியில் இருந்து கொண்டே பாஜகவை கடுமையாக விமர்சித்த ராமதாஸ்!

Author: Udayachandran RadhaKrishnan
26 July 2024, 1:00 pm

திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் பத்திரிகையாளர்களை சந்தித்தார் . அப்போது அவர் ,மின் கட்டண உயர்வு மூலம் மூன்று ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள வருவாய் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தார்.

மேலும் அவர் பேசும் போது ,வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டம் அடுத்த வாரம் நடைபெறுகின்ற பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் ஆகியவற்றின் கூட்டுக் கூட்டத்தில் தேதி அறிவிக்கப்படும் என்று கூறினார் . மேலும் அவர் பேசும் போது, வன்னியர்களுக்கு நீதிமன்ற உத்தரவுப்படி இட ஒதுக்கீடு கொடுப்பதாக கூறிய தமிழக அரசு தற்போது கொடுக்க முடியாது என்று மறுத்து வருகின்றது.

இதன் மூலம் வன்னியர்களுக்கு தமிழக அரசு பெரும் அநீதியை இழைத்து வருகின்றது என்று கூறினார் . மேலும் அவர் பேசும் போது ,திண்டிவனம் – திருவண்ணாமலை ரயில் பாதை திட்டம் உரிய நிலம் கையகப்படுத்தப்பட்டு உரிய நிதி ஒதுக்கி விரைவில் முடிக்கப்பட வேண்டும் என்று கூறினார் .

மேலும் அவர், காவிரி நீரை நம்பி ஒன்றரை லட்சம் ஏக்கர் குருவை நெல் சாகுபடியை விவசாயிகள் செய்துள்ளதால் தமிழக அரசு விவசாயிகள் பயன் பெறும் வகையில் காவிரி நீரை திறந்து விட அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும் என்று கூறினார் .

மேலும் அவர் பேசும் போது, தஞ்சாவூர் மாவட்டத்தில் மணல் கொள்ளை குறித்து புகார் அளித்த பொது மக்களுக்கு 100 நாள் வேலை மற்றும் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகின்றஅரசு உதவித்தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்படாது என்று மிரட்டிய துறை சார்ந்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

மேலும் அவர் பள்ளி மேலாண்மை குழுக்களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டவர் களுக்கான பிரதிநிதித்துவம் மறுக்கப்படுவது பெரும் சமூக அநீதி என்று சாடினார்.

அப்போது பத்திரிகையாளர் ஒருவரின் கேள்விக்கு பதில் அளித்த டாக்டர் ராமதாஸ் ,அதிக வரி செலுத்துகின்ற தமிழகத்திற்கு குறைந்த அளவே மத்திய அரசு நிதி ஒதுக்கி உள்ளதாகவும் , குறைந்த அளவு வரி செலுத்துகின்ற சில மாநிலங்களுக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கியதன் மூலம் தமிழக அரசுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுவதாக தெரிவித்த டாக்டர் ராமதாஸ் மத்திய அரசு இதனை கைவிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெயராஜ் உடன் இருந்தார்.

  • Telangana bans special shows சிறப்பு காட்சிக்கு END CARD…அல்லு அர்ஜுன் ஷாக்…பேரதிர்ச்சியில் சினிமா ரசிகர்கள்…!
  • Views: - 639

    0

    0