ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாதக டெபாசிட் இழந்த நிலையில், 5 ஆயிரத்துக்கும் அதிகமான நோட்டா வாக்குகள் பதிவாகியது பேசுபொருளாகியுள்ளது.
ஈரோடு: நடைபெற்று முடிந்த ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், திமுக வேட்பாளர் சந்திரகுமார், ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 439 வாக்குகள் பெற்று மாபெரும் வெற்றி பெற்றுள்ளார். அதேநேரம், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமி 23 ஆயிரத்து 810 வாக்குகள் பெற்றுள்ளார்.
இதன் மூலம் 90 ஆயிரத்து 629 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். அதேபோல், தேர்தலில் டெபாசிட் பெறத் தேவையான 25 ஆயிரத்து 777 வாக்குகள் தேவை என்ற நிலையில், 23 ஆயிரத்து 810 வாக்குகள் மட்டுமே பெற்றதால், நாதக வேட்பாளர் டெபாசிட் இழந்துள்ளார்.
இதில், கவனிக்க வேண்டியது என்னவென்றால், நோட்டா வாக்குகள் 5 ஆயிரத்து 474 வாக்குகள் கிடைத்துள்ளது. இதனால், நாதகவுக்கும் நோட்டாவுக்கும் தான் போட்டியே என்றும் அரசியல் நோக்கர்கள் கூறி வருகின்றனர். மேலும், ஈரோடு கிழக்கில் இதுவே அதிக நோட்டா வாக்குகள் பெற்ற தேர்தல் ஆகும்.
ஏனென்றால், 2021 சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவேரா, தமாகாவின் யுவராஜாவைவிட 8 ஆயிரத்து 904 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். மேலும், அந்தத் தேர்தலில் நோட்டாவுக்கு ஆயிரத்து 546 வாக்குகள் பதிவாகியிருந்தன.
ஆனால், அப்போது அமமுக வேட்பாளரைவிட, நோட்டாவுக்கு அதிக வாக்குகள் விழுந்தது கவனம் பெற்றது. பின்னர், திருமகன் ஈவேரா மறைவைத் தொடர்ந்து, 2023இல் நடந்த இடைத்தேர்தலில், காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், அதிமுக வேட்பாளர் தென்னரசுவைவிட 60 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். அந்தத் தேர்தலில் நோட்டாவுக்கு 798 வாக்குகள் விழுந்தன.
இதையும் படிங்க: இலவசங்களை கொடுத்த கெஜ்ரிவாலுக்கே இந்த நிலை.. திமுகவை யோசியுங்க : முன்னாள் அமைச்சர் சாடல்!
இந்த நிலையில், தற்போது 90 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் வெற்றி பெற, நோட்டாவுக்கு 5 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் கிடைத்துள்ளன. இதில் மற்றொரு விஷயம், இந்த் இடைத்தேர்தலில் அதிமுக, பாஜக உள்ளிட்ட கள கட்சிகள் புறக்கணித்தன.
இதில், பாஜக யாருக்கு வாக்களிக்க வேண்டும் என தொண்டர்களுக்கு அறிவுறுத்தவில்லை எனக் கூறப்படும் நிலையில், அதிமுகவினர், நோட்டாவுக்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. காரணம், இதில் நாதக சற்று அதிக வாக்குகளைப் பெற்றுவிட்டால், கட்சியின் பிராண்ட் சென்றுவிடும் என்பதால் இப்படியான உத்தரவை தலைமை போட்டிருப்பதாக கூறப்படுகிறது.
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.