இதனால்தான் ‘பொன்னியின் செல்வன்’ படத்தை உதயநிதிக்கு கொடுக்கல.. உண்மையை உடைத்த பயில்வான்..!

Author: Vignesh
26 September 2022, 12:26 pm

பொன்னியின் செல்வன் படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்திற்கு வழங்காதது ஏன் என்ற காரணத்தை கூறியுள்ளார் பயில்வான் ரங்கநாதன்.

பொன்னியின் செல்வன் படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்திற்கு வழங்காதது ஏன் என்ற காரணத்தை கூறியுள்ளார் பயில்வான் ரங்கநாதன்.

தமிழ் சினிமாவில் திரைக்கு பின்னால் நடக்கும் நிகழ்வுகளை வீடியோவாக வெளிச்சம் போட்டு காட்டுகிறார் நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன். அந்த வகையில் பொன்னியின் செல்வன் படத்தை மணிரத்னம் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவனத்திற்கு வழங்காதது ஏன் என்பது குறித்து தனது வீடியோவில் பேசியுள்ளார்.

அவர் பேசியிருப்பதாவது, பொன்னியின் செல்வன் படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்திற்கு வழங்க மணி ரத்னம் மறுத்துவிட்டார். ரெட் ஜெயண்ட் மூலம் சமீபத்தில் ரிலீஸ் செய்யப்பட்ட அனைத்து படங்களுமே நல்ல லாபத்தை பார்த்து வருகிறது. இதனால் தங்களின் படத்தை வாங்கும்படி ரெட் ஜெயண்ட் நிறுவனத்திடம் தயாரிப்பாளர்கள் கெஞ்சி வருகின்றனர்.

உதயநிதி ஸ்டாலின் தினமும் படம் பார்க்கிறார். எல்லா படத்தையும் அவர் வாங்குவதில்லை. தனக்கு பிடித்த படங்களை மட்டும்தான் வாங்கி டிஸ்ட்ரிபியூஷன் செய்கிறார். சமீபத்தில் கமலின் விக்ரம் படத்தை ரிலீஸ் செய்தார். அந்தப் படம் வசூலில் அசுர சாதனை செய்தது. 500 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து உலக சாதனை படைத்துள்ளது. இதனால் கமல்ஹாசன் மகிழ்ச்சியில் உள்ளார்.

இதனைத் தொடர்ந்து கமல்ஹாசன், உதயநிதி ஸ்டாலினை நேரிலும் சந்தித்து வருகிறார். ஆரம்பத்தில் பொன்னியின் செல்வன் படத்தின் தமிழ் நாட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் நிறுவனம் பெற்றதாக தகவல் வெளியானது. பொன்னியின் செல்வன் போஸ்டர்களிலும் ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் லோகோ இடம்பெற்றிருந்தது. ஆனால் இசை வெளியீட்டு விழாவில் லோகோ இடம்பெறவில்லை.

இடையில் ஏதோ நடந்துள்ளது. தியேட்டரில் ரிலீஸ் செய்ய ரெட் ஜெயண்ட் நிறுவனம் சில சதவீத தொகை பெற்றுக்கொள்கிறது. இது முழுக்க முழுக்க வெள்ளை பணம்தான். மணிரத்னத்திற்கு தனது படத்தின் மீது அதிக நம்பிக்கை உள்ளது. ஆகையால் தனது படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனத்திற்கு கொடுத்தால் கட்டுப்படியாகாது என்பதால் அவுட்ரேட்டில் படத்தை ரிலீஸ் செய்வது அல்லது தானே ரிலீஸ் செய்வது என்ற முடிவை எடுத்துள்ளார்.

ஆனால் லைகா ப்ரடெக்ஷன்ஸ் சுபாஷ்கரன் படத்தின் ரிலீஸ்க்கு முன்னாலே லாபம் பார்க்க நினைக்கிறார். இதனால் பொன்னியின் செல்வன் டிஸ்ட்ரிபியூஷன் விவகாரம் ஊசல் ஆடுகிறது. சன்பிக்சர்ஸ் நிறுவனம் பொன்னியின் செல்வன் படத்தின் தொலைக்காட்சி உரிமையை 25 கோடி ரூபாய்க்கு பெற்றுள்ளது. இவ்வாறு பயில்வான் ரங்கநாதன் தனது வீடியோவில் தெரிவித்துள்ளார்.

  • Sivakarthikeyan transition from TV to big screen சீரியல் வாய்ப்புக்கு ஏங்கிய சிவகார்த்திகேயன்..NO சொன்ன சின்னத்திரை நடிகர்..!
  • Views: - 1556

    8

    8