விராட்கோலிக்கு END CARD…’ருத்ராஜ் கெய்க்வாட்’ போடும் மாஸ்டர் பிளான்.!

Author: Selvan
24 March 2025, 6:17 pm

அணியின் பேலன்ஸா? சுயநல முடிவா?

ஐபிஎல் 2025 தொடர் மிகவும் பரபரப்பாக தொடங்கிய நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களது முதல் போட்டியில்,மும்பை இந்தியன்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றியை ருசித்தது.

இதையும் படியுங்க: படத்தை ட்ரோல் செய்தால் என்ன ஆகும்னு தெரியுமா..’கண்ணப்பா’ படக்குழு எச்சரிக்கை.!

மும்பை அணி முதலில் பேட்டிங் செய்து 9 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது.அந்த இலக்கை சிஎஸ்கே அணி 19.1 ஓவர்களில் எளிதாக சந்தித்து வெற்றியை உறுதிப்படுத்தியது.

இந்த போட்டியில் ரசிகர்களுக்கிடையே ஒரு முக்கியமான கேள்வி எழுந்தது அதாவது ருதுராஜ் கெய்க்வாட் ஏன் தொடக்க வீரராக களமிறங்கவில்லை? என்று, 2021, 2023 சீசன்களில் சிஎஸ்கே அணியின் தொடக்க வீரராக அதிக ரன்கள் குவித்த ருதுராஜ்,இந்த முறை தொடக்கத்திலேயே களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால்,மும்பை அணிக்கு எதிரான போட்டியில் ருதுராஜ் மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்ய வந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.போட்டிக்குப் பிறகு,இதுகுறித்து விளக்கம் அளித்த ருதுராஜ் “அணியின் பேலன்ஸிற்காகத்தான் மூன்றாவது இடத்தில் களமிறங்கினேன்” என்று கூறினார்.

ஆனால் உண்மையான காரணம் இதல்ல என்று பலரும் கூறி வருகின்றனர்.
இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடிக்க இளம் வீரர்கள் கடுமையாக போட்டியிடும் சூழ்நிலை நிலவுகிறது.ஏற்கனவே விராட் கோலி சர்வதேச டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார்.

அவருடைய இடத்திற்கான போட்டியில் திலக் வர்மா,சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன் உள்ளிட்ட வீரர்கள் இருக்கின்றனர்.இதனால்,இந்த இடத்தை பிடிக்க தற்போது ருதுராஜ் பிளான் போடுகிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடக்க வீரராக மட்டுமே விளையாடி வந்த ருதுராஜ்,மூன்றாவது இடத்தில் விளையாடும்போது விராட் கோலியின் இடத்திற்கே நேரடி மாற்றாக இருக்க முடியும் என்பதால் தான்,இந்த முடிவை அவர் எடுத்திருக்கலாம் என கருதப்படுகிறது.

  • Bharathiraja son Manoj death பெரும் சோகத்தில் ‘பாரதிராஜா’ குடும்பம்…கண்ணீரில் திரையுலகம்.!
  • Leave a Reply