நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் புதிய கட்சியின் துவங்கிய அரசியல் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். பனையூரில் உள்ள தமிழக வெற்றிக்கழக தலைமைச் செயலகத்தில் கட்சி கொடியை இன்று அறிமுகம் செய்து வைத்தார்.
அதன் பின்னர் கொடி கம்பத்தில் கொடியை ஏற்றி வைத்த நடிகர் விஜய் உறுதிமொழி ஏற்று கட்சிக் கொடியையும் அறிமுகம் செய்து வைத்தார். இன்று காலை 9:15 மணிக்கு உறுதிமொழி எடுத்த பின்னர் கட்சி கொடி அறிமுகம் செய்து வைத்தார் விஜய். அதன் பிறகு கொடிக்கம்பத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்த கொடியை ஏற்றினார்.
கொடியில் சிகப்பு, மஞ்சள் என இரண்டு வண்ணங்களுக்கு மத்தியில் இரண்டு போர் யானைகள் பிளிறும் வகையில் இடம் பெற்றுள்ளது. அத்துடன் வாகை மலருடன் இந்த கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கொடியேற்று நிகழ்வின் போது “தமிழன் கொடி பறக்குது…. தலைவன் யுகம் பிறக்குது” என்ற பாடல் வெளியிடப்பட்டிருந்தது. இந்த நிகழ்வில் நடிகர் விஜய்யின் தாய் தந்தையான சோபா மற்றும் சந்திரசேகர் இருவரும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் கொடியில் இரு யானைகள் இடம்பெறும் நடுப்பகுதியில் வாகை பூவும் இடம்பெற்றுள்ளது குறித்து கட்சியின் கொள்கைகள் அறிவிக்கும் போது கோடிக்கான விளக்கத்தையும் அறிவிப்பேன் என நடிகர் விஜய் கூறியிருந்தார். இந்நிலையில் இந்த கொடியில் வாகைப்பூ இடம் பெற என்ன காரணம் என்பது பற்றி தகவல் வெளியாகி இருக்கிறது.
அதாவது, சங்க காலத்தில் போரில் வெற்றி பெறும் வீரர்களுக்கு வாகை மலர் சூட்டப்பட்டு வெற்றி மகிழ்ச்சியை பகிர்ந்ததாக தமிழக இலக்கியங்களில் கூறப்பட்டு இருக்கிறது. இதனை அடிப்படையாக வைத்து தான் விஜய் தன்னுடைய கட்சியின் கொடியில் வாகை பூ வைத்திருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் ஈழத்தின் தேசிய மரம் வாகை பூ என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் கொடியில் வாகைப்பூ இடம் பெறுவதற்கான காரணம் என்ன என்பது குறித்து விஜய் விளக்கம் அளித்த பின்பு அதற்கான உண்மை என்ன என்பது தெரிய வரும்.