அதிகாலையில் மனைவி செய்த காரியம்.. பிறப்புறுப்பு அறுக்கப்பட்டு கிடந்த கணவர்.. அரியலூரில் என்ன நடந்தது?
Author: Hariharasudhan18 December 2024, 12:48 pm
அரியலூரில் குடிபோதையில் தகராறில் ஈடுபட்டு வந்த கணவரைக் கொடூரமாகத் தாக்கி, பிறப்புறுப்பை அறுத்துக் கொலை செய்த மனைவியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அரியலூர்: அரியலூர் மாவட்டம், ஆனந்தவாடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சின்னப்பா – பச்சையம்மாள் தம்பதி. இவர்களுக்கு பாலமுருகன் மற்றும் பானுப்பிரியா என்ற 2 பிள்ளைகள் உள்ளனர். இதில் பாலமுருகன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். பானுப்பிரியா திருமணம் முடிந்த நிலையில், தாமரைக்குளம் என்னும் கிராமத்தில் கணவருடன் வசித்து வருகிறார்.
இந்த நிலையில், மதுவுக்கு அடிமையான சின்னப்பா, தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியை அடித்து துன்புறுத்தி வந்துள்ளதாகத் தெரிகிறது. இதனிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு பானுப்பிரியா தாயின் வீட்டிற்கு வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் சின்னப்பா மதுபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார்.
இதனையடுத்து, அவர் தனது மனைவி மற்றும் மகளுடன் தகராறு செய்துள்ளார். இதனால் இருவரும் பக்கத்துக்கு வீட்டில் சென்று உறங்கி உள்ளனர். இந்த நிலையில், நேற்று அதிகாலை சின்னப்பா தனது வீட்டில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்து உள்ளார்.
இதற்கு காரணமாக, மதுபோதையில் தனது கை, கால்கள் மற்றும் அந்தரங்க உறுப்பை அறுத்து தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்களிடம் பச்சையம்மாள் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து, சின்னப்பாவின் உடலை அடக்கம் செய்ய அவரது உறவினர்கள் ஏற்பாடு செய்து கொண்டிருந்தனர்.
இதையும் படிங்க: ’காருக்கு இருக்கும் மதிப்பு என் மகனுக்கு இல்லையா?’.. 9 மணிநேரமாக திக் திக்.. கதறும் தாய்!
ஆனால், இதனிடையே இந்த தகவல் போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. எனவே, உடனடியாக அங்கு சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில், சின்னப்பாவின் தலையில் பலமாக தாக்கி இருப்பதும், பிறப்புறுப்பை அறுத்திருப்பதும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
எனவே, மனைவி பச்சையம்மாளை பிடித்து போலீசார் விசாரித்துள்ளனர். அப்போது, குடித்துவிட்டு வந்து தன்னை தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்ததால், கணவரை கொலை செய்ததாக பச்சையம்மாள் ஒப்புக் கொண்டுள்ளார். மேலும், இதனை அதிகாலை 3 மணியளவில் நிகழ்த்தியதாகவும் கூறியுள்ளார். தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரித்து வருகின்றனர்.