மேற்குவங்கத்தில், கணவரின் கிட்னியை விற்ற பணத்தை எடுத்துக்கொண்டு, கள்ளக்காதலனுடன் ஓடிய மனைவியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம், ஹவுரா மாவட்டத்தில் உள்ள சங்க்ரை என்ற பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது கணவர் மற்றும் மகளுடன் வசித்து வந்துள்ளார். இதனிடையே, அந்தப் பெண்ணுக்கு பாரக்பூரைச் சேர்ந்த ரவிதாஸ் என்பவருடன் முகநூல் மூலம் திருமணத்தை மீறிய பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமது மகளின் கல்வி மற்றும் திருமணத்திற்காக பணத்தைச் சேமித்து வைக்க வேண்டும் எனவும், அதற்காக உங்களது சிறுநீரகத்தை 10 லட்சம் ரூபாய்க்கு விற்றுவிடுங்கள் எனவும் அந்தப் பெண் தனது கணவரிடம் வலியுறுத்தியுள்ளார். இதற்கு ஒருகட்டத்தில் கணவரும் சம்மதம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தனது சிறுநீரகத்தை விற்று பணம் வாங்கி வந்துள்ளார். இதன் மூலம் தனது குடும்பத்தின் நிதி நிலைமை மேம்படும் என்றும் கணவர் நம்பிக்கையில் இருந்துள்ளார். ஆனால், இந்த பணத்தைப் பெற்ற அந்தப் பெண், வீட்டைவிட்டு வெளியேறிம் அவரது கள்ளக்காதலனுடன் தஞ்சமடைந்துள்ளார்.
பின்னர், தாம் ஏமாற்றப்பட்டோம் என்பதை அறிந்த அந்தப் பெண்ணின் கணவர், இதுகுறித்து போலீசில் புகார் அளித்துள்ளார். இதனிடையே, அந்தப் பெண் பாரக்பூரில் ரவிதாஸுடன் சேர்ந்து வாழ்வதை அறிந்த கணவரின் குடும்பத்தினர், அவரது 10 வயது மகளை அழைத்துக் கொண்டு அந்த இடத்துக்குச் சென்றுள்ளனர்.
இதையும் படிங்க: முட்டை பொரியலில் எலி பேஸ்ட்.. மகளை கொல்ல முயன்ற கொடூரத் தாய்!!
ஆனால், ரவியும் அந்த பெண்ணும் கதவை திறக்க மறுத்துள்ளனர். பின்னர், நீண்ட நேரத்துக்குப் பிறகு கதவை திறந்த அந்தப் பெண், “நீங்கள் செய்ய வேண்டியதைச் செய்யுங்கள். நான் விவாகரத்து கடிதம் அனுப்புகிறேன்” எனப் பதிலளித்துவிட்டு கதவை அடைத்துள்ளார்.
இதனையடுத்து, மாமனார், மாமியார், கணவன், பிள்ளைகள் என அனைவரும் எத்தனையோ முறை வேண்டுகோள் விடுத்தும், அந்தப் பெண் வெளியே வரவில்லை எனக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது.
சேலம், நாராயண நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் மாதவராஜ்(75). இவரது மனைவி பிரேமா(67). கணவன் மனைவி மட்டும் வீட்டில்…
டிராகன் திரைப்பட கதாநாயகி கயாது லோஹர் ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் புகழ்பெற்ற வாயுலிங்கமான ஸ்ரீகாளஹஸ்திஸ்வரர், ஞானபிரசுன்னாம்பிகை தாயாரை தரிசனம்…
பிரியங்கா வசி திருமணம் குறித்து பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பல விஷயங்களை பேசியுள்ளார். மெட்ரோ மெயில் என்ற சேனலுக்கு…
தமிழக அரசின் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 261 பயனாளிகளுக்கு வீடு கட்டிக் கொள்வதற்கு அரசு ஆணையினை உயர்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தனித்து தான் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவோம் என…
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஜீடிமெட்லா பகுதியில் உள்ளகஜுலராமரம், பாலாஜி லேஅவுட்டில் சஹஸ்ரா மகேஷ் ஹைட்ஸ் எனும் அடுக்குமாடி குடியிருப்பில் வெங்கடேஸ்வர்…
This website uses cookies.