கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த மத்தூர் அருகே உள்ள அந்தேரி ஊராட்சி வீரா கவுண்டனூர் கிராமத்தைச் சேர்ந்த தங்கராஜ் என்பவரது மகன் பழனிவேல்.
இவரும் வாலிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த குமார் என்பவரது மகள் சங்கீதா என்பவரும் கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் கல்லூரி காலங்களில் காதலித்து வந்ததாக தெரிகிறது.
இருவரும் இது வேறு சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் என்பதால் இருவரது வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் பழனிவேல்-சங்கீதா இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
பின்னர் கணவன் மனைவி இருவரும் நல்லபடியாக குடும்பம் நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்ற சங்கீதா அரசு பணியில் சேர்ந்துள்ளார்
அப்பொழுது இருந்தே கணவன் மனைவி இருவருக்கும் இடையே தகராறு இருந்து வந்துள்ளது. பின்னர் மனைவி சங்கீதா அவரது அம்மாவான சுகமாணிக்கத்தின் அரவணைப்பில் குழந்தைகளை அழைத்துக் கொண்டு சென்றதாக தெரிகிறது.
பின்னர் கணவனும் தனது மனைவியின் வீட்டிலேயே தங்கி குடும்பம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் அவர்கள் வீட்டிற்கு சங்கீதாவின் வீட்டிற்கு உறவினரான தினேஷ் என்ற இளைஞர் நட்பு ரீதியாக வந்து சென்றுள்ளார்.
நட்பு நாளடைவில் சங்கீதாவுடன் காதலாக மலர கள்ளக்காதலாக உருவெடுத்து இவர்களது நட்பு தொடர்ந்து இருந்துள்ளது. இதில் கணவன் அவரது கள்ளக்காதல் குறித்து கேட்ட நிலையில் இனி பழனிவேலுடன் குடும்பம் நடத்த முடியாது என்று கூறிய பெண் ஆசிரியர் சங்கீதா விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பியதாக தெரிகிறது.
இதில் மனவிவியை விட்டு பிரிந்து வாழ முடியாது என பழனிவேல் நீதிமன்றத்தில் பதில் அனுப்பியதாகவும் குழந்தைகளின் நலனுக்காக சேர்ந்து வாழ விரும்புவதாகவும் கூறி வந்த நிலையில் நேற்று இரவு பழனிவேல் வீட்டிற்கு செல்லும் பொழுது சங்கீதா அவரது கள்ளக்காதலனான தினேசை வீட்டிற்கு போன் செய்து வர வைத்துள்ளார்.
யாரும் இல்லாத வேலையில் வீட்டினில் சென்ற தினேஷ் படுக்கையறையில் ஒன்றாக இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த பழனிவேல் கடைக்குச் சென்று இரண்டு பூட்டுகளை வாங்கி வந்து வீட்டின் வெளியே பூட்டிவிட்டு, கள்ளக்காதலன் தினேஷின் மனைவி ஹரிணி என்பவரை அழைத்து வந்து காட்டியுள்ளார்.
பின்னர் மத்தூர் போலீசாருக்கு தகவல் அளித்து அங்கு வந்த மத்தூர் போலீசார் கதவை திறக்க கூறியதன் பேரில் ஆசிரியர் சங்கீதா மட்டும் வெளியே வந்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த பழனிவேல் அவரது மனைவி சங்கிதாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் கணவன் மனைவி இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் கணவனை மனைவி சங்கீதா செருப்பால் அடிப்பேன் எனக் கூறிய பொழுது ஆத்திரத்தில் பழனிவேல் காலில் அணிந்திருந்த செருப்பை கழட்டி கையில் பிடித்துக் கொண்ட பழனியில் வீட்டை திறந்து காட்டு யாரும் இல்லை என்றால் என்னை செருப்பால் அடி என செருப்பை அவரிடம் கொடுத்து வாக்குவாதம் செய்தார்.
அப்பொழுது அங்கு வந்த சங்கிதாவுடன் பணிசெயும் மற்றொரு பெண் ஆசிரியரின் கணவரின் இரு சக்கர வாகனத்தில் அமர்ந்து ஆசிரியர் சங்கீதா சென்றுவிட்டார்.
இதில் வீட்டின் உள்ளே இருந்த கள்ளக்காதலன் தினேஷ் வீட்டை விட்டு வெளியே வராமல் உள்ளே இருந்த நிலையில் போலீசார் பழனிவேலை அறிவுரை கூறிய அனுப்பி வைத்த நிலையில் அங்கிருந்து பழனிவேல் சென்ற பொழுது ஆசிரியர் சங்கீதாவின் உறவினர்கள் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் சிறிது நேரம் பரபரப்பு ஏற்படுத்தியது.
மேலும் கணவனுக்கு தெரியாமல் கள்ளக்காதலனுடன் இருந்ததை தட்டி கேட்ட கணவனுக்கு விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பிய மனைவியை கையும் களவுமாக பிடித்து வீட்டை பூட்டு போட்டு கள்ளக்காதலன் மனைவியை அழைத்து வந்து தகராறில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டாப் தொகுப்பாளினி விஜய் தொலைக்காட்சியில் கிட்டத்தட்ட 8 வருடங்களுக்கும் மேலாக பல்வேறு நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக வலம் வருபவர்தான் பிரியங்கா தேஷ்பாண்டே.…
நீட் தேர்வை தமிழ்நாட்டில் கொண்டு வந்தது யார் என்ற விவாதம் இன்று சட்டபேரவையில் திமுக - அதிமுக இடையே காரசார…
அஜித்தும் கார் ரேஸும் அஜித்குமார் சினிமாவுக்கு நடிக்க வந்ததற்கு காரணமே அதில் வரும் பணத்தை வைத்து கார் பந்தயத்தில் கலந்துகொள்வதற்குத்தான்…
பிரியாங்காவுக்கு நடந்த 2வது திருமணம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் திருமணம் செய்த வசி சாச்சி குறித்து பல…
சச்சின் ரீரிலீஸ் விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்து மாஸ் ஹிட் அடித்த “சச்சின்” திரைப்படம் கடந்த 18…
90களின் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் நடிகை சிம்ரன். இடையழகி என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட சிம்ரன், நடிப்பு திறமையால உச்சகட்ட நடிகையானார்.…
This website uses cookies.