கணவனைக் கொல்ல 20 சவரன் நகையை அடகு வைத்த மனைவி.. திருப்பூரில் அரங்கேறிய சம்பவம்!

Author: Hariharasudhan
6 December 2024, 1:27 pm

திருப்பூரில் கணவனைக் கொல்வதற்காக 20 சவரன் தங்க நகையை அடகு வைத்து கள்ளக்காதலனுக்கு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், அவிநாசி அடுத்த தாமரை கார்டனைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரை ஐந்து பேர் கொண்ட கும்பல், அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் வெட்டிக் கொலை செய்தது. இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து போலீசார் விசாரணையைத் துவங்கினர். இதன்படி, கொலைச் சம்பவம் நடந்த இடத்தில் கிடைத்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

இதன் அடிப்படையில், கோபாலகிருஷ்ணன், அஜித், சிம்போஸ், சரண் மற்றும் ஜெயபிரகாஷ் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து இவர்களிடம் நடத்திய விசாரணையில், சையது இர்ஃபான் என்பவர் ரமேஷைக் கொலை செய்ய 8 லட்சம் ரூபாய் கொடுத்தது தெரிய வந்து உள்ளது. இந்த நிலையில், சையது இர்ஃபானிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர்.

Blood

இவ்வாறு நடத்தப்பட்ட விசாரணையில், கொல்லப்பட்ட ரமேஷின் மனைவி விஜயலட்சுமிக்கும், சையது இர்ஃபானுக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்தது தெரிய வந்தது. அது மட்டுமல்லாமல், தனது கள்ள உறவுக்கு இடையூறாக இருந்த தனது கணவர் ரமேஷை கொலை செய்ய விஜயலட்சுமி, தான் அணிந்திருந்த 20 சவரன் நகையை சையது இர்ஃபானிடம் கழற்றி கொடுத்ததும், அதனை அவினாசியில் உள்ள இந்தியன் வங்கியில் அவர் அடகு வைத்து பணம் பெற்றதும் தெரிய வந்து உள்ளது.

இதையும் படிங்க: “நாங்கள் விலகியிருக்கிறோம்”.. மீண்டும் அரசியல் அக்கணம் வைத்த திருமாவளவன்!

இதையடுத்து விஜயலட்சுமி, சையது இர்ஃபான் மற்றும் அவர்களுக்கு உதவி செய்த அரவிந்த் உள்பட கூலிப்படையைச சேர்ந்த 5 பேர் என எட்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பிறந்தவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

  • Rajkumar Periyasamy Pan-India Film ஒரே படம் ஓஹோ-னு வாழ்க்கை…பாலிவுட்டில் களம் இறங்கிய அமரன் பட இயக்குனர்..!
  • Views: - 102

    0

    0