விழுப்புரம் : குடும்ப பிரச்சனையால் மனைவியை கொடூரமாக கொன்ற கணவனை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்ட வானூர் கிளியனூர் அருகே உள்ள தைலாபுரம் கருடகம்ப வீதியைச் சேர்ந்த சிவகேசு மகன் சங்கர் (வயது 42) கூலி தொழிலாளி. இவரது மனைவி பாக்கியலட்சுமி (வயது 40).
இந்த தம்பதிக்கு இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கணவனுக்கு மனைவிக்கும் இன்று காலை ஏற்பட்ட தகராறில், சங்கர் கத்தியால் மனைவி பாக்கியலட்சுமி வலது பக்க தலையில் கொடூரமாக வெட்டியுள்ளார்.
இதில் நிலைகுலைந்து கிழே விழுந்தார். உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் பாக்கியலட்சுமியை மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் பாக்கியலட்சுமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து வழக்கு பதிவு செய்து கணவர் சங்கரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் கணவர் மனைவி பிரச்சனையில் மனைவியை கத்தியால் வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…
ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…
This website uses cookies.