நண்பனின் மனைவியுடன் தீரா காதல்.. உச்சத்திற்கு சென்ற தகாத உறவு.. இளைஞர் பரிதாப பலி!
Author: Udayachandran RadhaKrishnan24 October 2024, 10:44 am
தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த மருதிபட்டி அருகே உள்ள கல்லடிப்பட்டி கிராமத்தில், பேருந்து நிழல் கூடத்தில் இன்று அதிகாலை இளைஞர் ஒருவரின் உடல் ரத்த வெள்ளத்தில் மண்டை உடைக்கப்பட்டு சிதைக்கப்பட்டு இருந்தது, அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி இருந்தன.
இதனைத் தொடர்ந்து மொரப்பூர் காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் பெயரில் அங்கு வந்த காவல்துறையினர் உயிரிழந்து கிடைக்கும் இளைஞர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது இந்த இளைஞர் கணபதிப்பட்டி மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த பழனிசாமி என்பவருடைய மகன் ராஜாராமன் என்பதும் இவருக்கு திருமணம் ஆகி இரண்டு மகள்கள் ஒரு மகன் மற்றும் மனைவி உள்ளதாகவும், இவர் கோயம்புத்தூரில் கூலி வேலை செய்து வருவதாகவும் தகவல் கிடைத்தது.
ராஜாராமன்
நேற்று இரவு ராஜாராமனுக்கும் அவருடைய மனைவிக்கும் பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், தான் கோயம்புத்தூருக்கு செல்வதாக துணி பைகளை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு சென்றுள்ளாராம்.
இந்த நிலையில் காவல்துறையினரின் விசாரணையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு, ராஜாராமனின் மனைவி தமிழ் இலக்கியா அரூரில் உள்ள ஒரு தனியார் சலூன் மற்றும் அழகு நிலையத்தில் பணிபுரிந்து வந்ததாகவும் அங்கு, உடன் பணிபுரிந்து வரும் சரவணகுமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
ஒரு வருடமாக இருவருக்கும் கேடா நட்பு இருந்து வந்த நிலையில் தமிழ் இலக்கியாவின் கணவர் ராஜாராமனுடன் நட்பாக பழகி வந்துள்ளார் சரவணகுமார்.
சரவணக்குமார்
இந்த நிலையில் நேற்று இரவு மது போதையில் இருந்த ராஜாராமனை உடன் இருந்த சரவணகுமார் கல்லால் தலையில் தாக்கி சிதைக்கப்பட்டுள்ளார் என போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து தமிழ் இலக்கியாவை காவல்துறையினர் மொரப்பூர் காவல் நிலையத்தில் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் சரவண குமாரையும் விசாரணைக்கு போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. உயிரிழந்த ராஜாராமனின் உடல் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.