உபியில், காதல் கணவரை 15 துண்டுகளாக வெட்டி டிரம்மில் சிமெண்ட் போட்டு மூடிவிட்டு கள்ளக்காதலனுடன் ஓடிய மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.
லக்னோ: உத்தரப் பிரதேசத்தின் கவுரிபுரா பகுதியைச் சேர்ந்தவர் முஸ்கான் ரஸ்தோகி (27). இவருக்கும், சவுரப் ராஜ்புட்(29) என்பவரும் கடந்த 2016ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்துள்ளனர். இதில், ராஜ்புட் வர்த்தக கப்பல் அதிகாரியாக பணிபுரிந்து வந்தார். மேலும், இருவீட்டார் எதிர்ப்பால், மீரட்டின் இந்திரா நகரில் வாடகை வீட்டில் வசித்தனர்.
இந்த தம்பதிக்கு, கடந்த 2019ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில், முஸ்கானுக்கு ஷகில் (25) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதேநேரம், கப்பலிலேயே மாதக்கணக்கில் சவுரப் பணியில் இருந்து வந்தது, முஸ்கானுக்கு வசதியாக இருந்துள்ளது.
இந்த நிலையில், சவுரப் வேலை செய்த கப்பல், கடந்த மாதம் லண்டன் வந்துள்ளது. அப்போது, மனைவி முஸ்கானின் பிறந்த நாளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க நினைத்த சவுரப், லண்டனில் இருந்து புறப்பட்டு கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி சொந்த ஊருக்கு வந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த முஸ்கான், சவுரபை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார்.
இதன்படி, கடந்த மார்ச் 4ஆம் தேதி, தனது கணவருக்கு உணவில் துாக்க மருந்து கலந்து கொடுத்துள்ளார். இதனால் அவர் மயங்கியதும், கள்ளக்காதலன் ஷகிலுடன் சேர்ந்து, கத்தியால் 15 துண்டுகளாக சவுரப்பை வெட்டிக் கொன்றுள்ளார். பின்னர், பெரிய டிரம்மில் அந்த துண்டுகளைப் போட்டு மூடிவிட்டு சிமெண்டால் பூசியுள்ளனர்.
இதனிடையே, சவுரபை காணாமல் அக்கம்பக்கத்தினர் விசாரித்தபோது, அவர் மணாலி சென்றுவிட்டதாகவும், தானும் செல்ல இருப்பதாகவும் கூறிய முஸ்கான், எதுவுமே நடக்காதது போல் கள்ளக் காதலனுடன் மணாலி சென்றுள்ளார். மேலும், அங்கிருந்தபடியே கொலையை மறைப்பதற்காக, சவுரபின் இன்ஸ்டாகிராம் அக்கவுண்டிலேயே புகைப்படங்களை முஸ்கான் பதிவிட்டுள்ளார்.
ஆனால், சவுரபை மொபைல்போனில் அவரது குடும்பத்தினர் தொடர்பு கொண்டபோது யாரும் எடுக்காததால் சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர், போலீசில் புகார் அளித்துள்ளனர். இதனிடையே, 10 நாட்களுக்கும் மேல் திறக்கப்படாமல் கிடந்த முஸ்கான் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது.
இதையும் படிங்க: விஜய்க்கு அப்பாவாக நடிக்கும் பிரபல ஹீரோ…25 ஆண்டுகளுக்கு பிறகு ‘ஜனநாயகன்’ படத்தில் என்ட்ரி.!
இது தொடர்பாக அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் கதவை உடைத்து வீட்டினுள் சென்ற போலீசார் டிரம்மை அறுத்து பார்த்தபோது, அழுகிய நிலையில் சவுரப்பின் உடல் பாகங்கள் கிடந்துள்ளன. இதனையடுத்து, முஸ்கானையும், ஷகிலையும் தேடிய போலீசார், நேற்று அவர்களைக் கைது செய்தனர்.
பின்னர் அவர்களிடம் விசாரித்தபோது, சவுரபை திட்டம்போட்டுக் கொன்றுவிட்டு டிரம்மில் அடைத்ததை ஒப்புக் கொண்டுள்ளனர். மேலும், கொலையை மறைக்க மணாலியில் சுற்றியதாகவும் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்த போலீசார், தொடர்ந்து அவர்களிடம் விசாரித்து வருகின்றனர்.
கம்பேக் கொடுக்கிறாரா பாவனா பொதுவாக,கோலிவுட்டில் தமிழ் பேசும் தமிழ் நடிகைகளை விட,தமிழ் பேசும் மலையாள நடிகைகள் அதிகமாக இருப்பது அனைவருக்கும்…
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக கோயம்புத்தூரை சேர்ந்த கார்த்திகேயன் அவரது மகனுடன் திருமலைக்கு வந்தார். இதேபோன்று கர்நாடக…
நடிகர் சூர்யா உடன் நடித்த நடிகை ஜோதிகாவை காதலித்து கரம்பிடித்தார். சூர்யா வீட்டில் எதிர்ப்பு என்ற பேச்சு எழுந்தாலும், இறுதியில்…
பெரியார் விருதை ஏன் திருப்பி அளிக்கிறார்? இயக்குநர் கோபி நயினார் சமீபத்தில் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவு பெரும் சர்ச்சையை…
நடிகர் சூர்யா கண்டிப்பாக ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். இவரது நடிப்பில் சமீபத்தில் வந்த திரைப்படங்கள் எதுவும் வரவேற்பை…
அஜித்தின் "ரெட் டிராகன்" கதாபாத்திரம் – மாஸ் அப்டேட்! அஜித் குமார் நடிப்பில் உருவாகும் "குட் பேட் அக்லி" திரைப்படத்தை…
This website uses cookies.