தமிழகம்

3வது திருமணம் செய்ய ஆசை.. முன்னாள் காதலனை வைத்து 2வது கணவர் கொலை!

கர்நாடகாவைச் சேர்ந்த 2வது கணவரை வேளாங்கண்ணியில் வைத்து முன்னாள் காதலனை வைத்து கொலை செய்த பெண் உள்பட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நாகப்பட்டினம்: கர்நாடக மாநிலம், பெங்களூரைச் சேர்ந்தவர் ஜனார்த்தனன் (22). இவரது காதலி எலன்மேரி. இவர்கள் இருவரும் கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி வேளாங்கண்ணிக்கு வந்துள்ளனர். பின்னர், மாதா கோவில் பின்புறம் உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கிய இருவரும், மறுநாளே வேளாங்கண்ணி மாதா கோயிலில் திருமணம் செய்துள்ளனர்.

இந்த நிலையில், நேற்று மாலை வேளாங்கண்ணி ரயில் நிலையம் அருகே காட்டில் ஜனார்த்தனன் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். இதனையடுத்து, வேளாங்கண்ணி போலீசார் ஜனார்த்தனன் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக ஓரத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அப்போது, அங்கு அழுது கொண்டிருந்த எலன்மேரியிடம், வேளாங்கண்ணி காவல் ஆய்வாளர் சுப்ரியா விசாரணை நடத்தியுள்ளார். அதற்கு, தனது கணவரின் நண்பர்களே அவரைக் கொலை செய்து விட்டதாக கூறியுள்ளனர். மேலும் நடத்திய விசாரணையில், தனது கணவரின் நண்பர்கள் ஜீவா மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் எங்கள் அறையில் தங்கினார்கள், அவர்கள்தான் எனது கணவரைக் கொன்று விட்டனர் என்றும் கூறியுள்ளார்.

அதோடு, “எனது கணவரை அழைத்துக் கொண்டு வெளியே சென்றவர்கள், என்னிடம் வந்து உனது கணவர் ஜனார்த்தனனை ரயில்வே ஸ்டேஷன் அருகே கொலை செய்து போட்டு விட்டோம்’ எனத் தெரிவித்துவிட்டு இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்” எனக் கூறியுள்ளார்.

ஆனால்,எலன்மேரியின் பேச்சில் சந்தேகம் அடைந்த போலீசார், அவருக்கு தெரியாமலேயே அவரைப் பற்றி விசாரணை நடத்த தொடங்கியுள்ளனர். இதனிடையே, ஜனார்த்தனனைக் கொலை செய்துவிட்டு பெங்களூர் தப்ப முயன்ற ஜீவா மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய இருவரையும், தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

பின்னர், இருவரையும் வேளாங்கண்ணி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து நடத்திய விசாரணையில், கைது செய்யப்பட்ட ஜீவாவும், எலன் மேரியும் ஒரே கல்லூரியில் படித்த நிலையில், இருவரும் காதலித்துள்ளனர். இதனிடையே, ஜனார்த்தனனையும் எலன்மேரி காதலித்து திருமணமும் செய்து உள்ளார்.

இதையும் படிங்க: அரசு வீடு வாங்கித் தாரேன்.. மாநகராட்சி அதிகாரிகளை கைகாட்டி லட்சக்கணக்கில் மோசடி!

ஆனால், ஜனார்த்தனனுடன் வாழப் பிடிக்காமல் அவரை தீர்த்துக்கட்ட திட்டம் போட்டு, அதற்காக தனது முன்னாள் காதலன் ஜீவா மற்றும் அவரது நண்பரை வரவழைத்து கொலைத் திட்டத்தை அரங்கேற்றியுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, எலன்மேரி மற்றும் ஜீவா ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய வேளாங்கண்ணி போலீசார், எலன் மேரியை காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, எலன் மேரிக்கு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு தர்மபுரியில் முதல் திருமணம் நடந்துள்ளது. இதனையடுத்து, இரண்டாவதாக ஜனார்த்தனனை திருமணம் செய்து கொண்ட எலன்மேரி, அவரையும் பிடிக்காமல் மூன்றாவது திருமணம் செய்துகொள்ள ஜனார்த்தனனைக் கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Hariharasudhan R

Recent Posts

அமைச்சரின் குழந்தைகள் அறிவற்றவர்களா? அண்ணாமலை கடும் தாக்கு!

பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் மகன் மூன்று மொழி சொல்லிக் கொடுக்கக்கூடிய பள்ளியில்தான் படிக்கிறார், அதனால் அவருக்குத்தானே அறிவில்லை என்று அர்த்தம்…

2 hours ago

என் போனை கொடுக்குறேன்..செக் பண்ணி பாத்துக்கோங்க…டி.இமான் ஓபன் டாக்.!

டி. இமான் தனிப்பட்ட வாழ்க்கை தமிழ் சினிமாவில் தனித்துவமான இசையமைப்பாளராக திகழும் டி.இமான் விஸ்வாசம், மைனா, கும்கி, வருத்தப்படாத வாலிபர்…

2 hours ago

மனைவியின் தகாத உறவால் கணவர் கொலை.. விசாரணையில் வெளியான மற்றொரு சம்பவம்!

சிவகாசியில், மனைவியின் தகாத உறவைத் தட்டிக் கேட்ட கணவர் கள்ளக்காதலன் உள்ளிட்ட 4 பேரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். விருதுநகர்:…

2 hours ago

போடு வெடிய..! OTT-யில் வியூஸை அள்ளும் குடும்பஸ்தன்..!

குடும்பஸ்தன் திரைப்படம் – ஓடிடி & வசூல் சாதனை! மிக குறைந்த பட்ஜெட்டில் உருவான குடும்பஸ்தன் திரைப்படம் திரையரங்குகளில் பெரிய…

3 hours ago

அதிமுக கோட்டையை வெல்ல வியூகம்? திமுக தலைமையால் திருப்பூருக்கு வந்த சோதனை!

திருப்பூர் மாவட்ட திமுகவை நான்காக பிரித்து பொறுப்பாளர்கள் நியமிக்கப்ப்பட்டுள்ள நிலையில், இதனால் அதிமுக இடையே கடும் போட்டி நிலவும் என…

3 hours ago

’செளந்தர்யா திட்டமிட்டு கொலை’.. மாளிகையே காரணம்.. பரபரப்பு கடிதம்!

தென்னிந்திய சினிமாவில் ஜொலித்து வந்த நடிகை செளந்தர்யா விபத்தில் மரணமடையவில்லை எனவும், அது திட்டமிட்ட கொலை என்றும் சிட்டிபாபு என்பவர்…

4 hours ago

This website uses cookies.