குடும்பம் நடத்த வருவியா இல்லையா? மனைவி, மாமியார், மாமனாருக்கு கத்திக்குத்து : கணவர் வெறிச்செயல்!

Author: Udayachandran RadhaKrishnan
22 August 2024, 1:23 pm

மேட்டுப்பாளையம் மகாதேவபுரம் பெருமாள் லே-அவுட் பகுதியைச்சேர்ந்தவர் ஹக்கீம்(36).இவருக்கு மனைவி சாயிதா(32) என்ற மனைவியும்,அல்ஷிபா(8) என்ற மகளும் உள்ளனர்.

சாயிதா கடந்த 17 ஆம் தேதி குழந்தையுடன் மாயமாகி விட்டதாக கணவர் ஹக்கீம் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த மேட்டுப்பாளையம் காவல் ஆய்வாளர் மணிகண்டன் மாயமான சாயிதா மற்றும் குழந்தையை தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று மாலை சாயிதா மற்றும் குழந்தை மேட்டுப்பாளையம் காவல் நிலையத்திற்கு வந்தனர். அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் கணவர் ஹக்கீம் தன் மீது சந்தேகம் கொள்வதால் அவருடன் வாழ விருப்பமில்லை என்று கூறி தனது தந்தை மஜீத்துடன் பெற்றோர் வீட்டிற்கு சென்றார்.

ஆத்திரமடைந்த ஹக்கீம் நேற்றிரவு மாமனார் வீட்டிற்கு சென்று குடும்பம் நடத்த மனைவியை அழைத்துள்ளார்.

அவர் வர மறுக்கவே வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.வாக்குவாதம் முற்றி கட்டத்தில் ஹக்கீம் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மனைவி சாயிதா,மாமனார் மஜீத்(72) மற்றும் மாமியார் சமையாவை (62) சரமாரியாக குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த மூவரையும் மீட்ட அக்கம்பக்கத்தினர் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும்,தப்பி ஓடிய ஹக்கீமை தேடி வருகின்றனர்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 222

    0

    0