திருமணம் ஆன 3 ஆண்டில் 4 முறை கருக்கலைப்பு.. ஏமாற்றிய கணவன் : கதறும் மனைவி!!

Author: Udayachandran RadhaKrishnan
12 October 2024, 6:58 pm

லிவிங் டூகெதரில் ஒன்றரை ஆண்டுகள் வாழ்ந்து திருமணம் செய்த பின் கருவை கலைத்து ஏமாற்றிய கணவனுடன் சேர்த்து வைக்க கோரி பெண் தர்ணா.

திருப்பூர் பாரதிநகரை சேர்ந்த பால்ராஜ் – வசந்தா ஆகியோரின் மகள் பரிமளா (வயது 31). சிறுவயதிலேயே பெற்றோரை இழந்த பரிமளா கடந்த 2019 ஆம் ஆண்டு தஞ்சாவூரில் உள்ள உறவின வீட்டிற்கு செல்லும் போது, பேருந்தில் புதுக்கோட்டை மச்சுவாடி
வ உ சி நகரை சேர்ந்த சதீஷ்குமார் என்பவருடன் பழக்கமாகி, பின்னர் அவரை காதலித்து வந்த நிலையில், ஒன்றரை காலம் லிவிங் டு முறையில் வாழ்ந்து வந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து ஒன்றை வருடம் கழித்து சதீஷ்குமார் வேலை நிமித்தமாக சவுதி அரேபியா சென்றுள்ளார்.

பின்னர் 2022 ஆம் ஆண்டு சொந்த ஊர் திரும்பி வந்த சதீஷ்க்கு பெற்றோர் சம்மதத்துடன் முன்னிலையில் புதுக்கோட்டை திருவப்பூரில் திருமணம் நடந்துள்ளது.

இந்நிலையில் கடந்த 21ஆம் தேதி வரை திருப்பூரில் இருவரும் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சதீஷ் குடும்பத்தினர், சதீஷை திருப்பூரில் இருந்து அழைத்து வந்ததாக கூறப்படுகிறது.

சொந்த ஊர் வந்த சதீஷ் பரிமளாவிடம் எந்த ஒரு தொடர்பும் இல்லாமல் இருந்துள்ளார். பின்னர் பலமுறை சதீஷை தொடர்பு கொண்ட பரிமளா, நேற்று புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கணவரை மீட்டுத் தருமாறு புகார் அளித்துள்ளார்.

இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், புதுக்கோட்டை வ உ சி நகரில் உள்ள சதீஷ் வீட்டு முன்பு தரையில் அமர்ந்து, தனது கணவரை சேர்த்து வைக்க வேண்டும் என்ற வாசகம் அடங்கிய பேனரை கையில் ஏந்தியவாறு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

மேலும் திருமணம் ஆகிய மூன்று ஆண்டுகளில் நான்கு முறை கருக்கலைப்பு செய்துள்ளதாகவும், சதீஷை தன்னிடமிருந்து குடும்பத்தினர் தான் இருக்கிறார்கள் என்றும், குடும்பத்தினரிடமிருந்து தனது கணவர் சதீஷை மீட்டு தருமாறு கோரிக்கை வைத்தார்.

இதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த அனைத்து மகளிர் காவல் துறையினர் இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி பரிமளாவை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

மேலும் சதீஷ் குடும்பத்தினரிடம் காவல்துறையினர் விசாரித்த போது, பரிமளா குடும்பத்தினர் சதீஷை பிரித்து விட்டனர் என்று கூறுவது முற்றிலும் தவறானது.
பரிமளாவை விட்டு பிரிவது சதீஷின் தனிப்பட்ட விருப்பம், மேலும் இது குறித்த விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே குடும்பத்திற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தெரிவித்தனர்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 206

    0

    0