கணவரின் நண்பருக்கு நிர்வாண போட்டோக்களை அனுப்பிய மனைவி.. அடுத்து நடந்த திடுக்!

Author: Hariharasudhan
16 January 2025, 12:03 pm

கணவரின் நண்பருடன் கள்ளக்காதலில் இருந்த மனைவி, அவருக்கு நிர்வாணப் புகைப்படங்களை அனுப்பியதன் மூலம் பெரும் சிக்கலில் உள்ளார்.

திருச்சூர்: கேரள மாநிலம், திருச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் ஒரு பெண். இப்பெண்ணின் கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இதனிடையே, தனது கணவரின் நண்பரான கதிர் என்பவர், சமூக வலைத்தளம் மூலம் பெண்ணிடம் பழகி உள்ளார். இந்தப் பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறி உள்ளது.

அது மட்டுமல்லாமல், அப்பெண் தனது நிர்வாணப் புகைப்படங்களை கதிருக்கு அனுப்பி உள்ளார். இவ்வாறு அப்பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களை பெற்றுக் கொண்ட கதிர், உனது நிர்வாணப் புகைப்படத்தை உன்னுடைய கணவருக்கு அனுப்பி விடுவேன் என்றும், அந்தப் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன் எனவும் கூறி மிரட்டியுள்ளார்.

Wife sent her private photos to Husband's Friend in Thrissur Kerala

இதனால் பயந்து போன பெண், கதிர் கேட்ட ஒரு லட்சம் ரூபாயைக் கொடுத்துள்ளார். இவ்வாறு பணத்தை பெற்றுக் கொண்ட பிறகும், கதிர் கூடுதலாக பணம் கேட்டு அப்பெண்ணை மிரட்டி உள்ளார். இதனை தனது கணவரிடமும் சொல்ல முடியாமல், என்ன செய்வதென்று தெரியாமல் இருந்துள்ளார்.

இதையும் படிங்க: மைதாவிற்கு பதிலா இந்த மாதிரி ஹெல்தி ஆப்ஷன் கூட இருக்கு… தெரிஞ்சுக்கோங்க!!!

இந்த நிலையில், இது குறித்து பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், கதிரைத் தேடி வந்தனர். இதனையடுத்து, காட்டூர் பகுதியில் வசித்து வந்த கதிரைக் கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Veera Dheera Sooran Box Office Collection இறங்கி அடித்த சியான் விக்ரம்…அசுர வசூலில் ‘வீர தீர சூரன்’.!