3 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்த மனைவி.. துரத்திக் கொண்டு வந்த கணவன் : நெஞ்சை உலுக்க வைக்கும் அதிர்ச்சி சம்பவம்!!

Author: Udayachandran RadhaKrishnan
7 February 2023, 9:46 pm

தேனி மாவட்டத்தில் போடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டது பொட்டிபுரம் கிராமம். இங்கு இந்திரா காலனியில் வசித்து வருபவர் ராமராஜ் வயது 35. இவரது மனைவி வீரமணி(25) குழந்தைகள் ராஜபாண்டி(5) ஜீவிதா(3) ஈஷா ஸ்ரீ (2). இவர்கள் கேரளாவில் உள்ள காரித்தோடு என்ற பகுதியில் ஏலத்தோட்டத்தில் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார்.

இவரது சொந்த ஊரான பொட்டிபுரத்தில் இவரது மனைவி மற்றும் இவரது குழந்தைகள் வசித்து வந்தனர். இந்நிலையில் இவருக்கு அதிக கடன் சுமை இருந்து வந்ததால் வீட்டில் விசேஷம் வைத்து அதில் வரும் செய்முறை மூலமாக கடனை அடிப்பதற்கு உண்டான நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் அவருடைய குலசாமி கோயிலுக்கு சென்று அவரும் அவரது குழந்தைகளும் மொட்டை அடித்து விட்டு ஊருக்கு திரும்பி உள்ளனர்.

இன்று அவரது வீட்டில் விசேஷம் வைப்பது பற்றி மனைவியிடையே கலந்து ஆலோசித்த பொழுது இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில் ராமராஜ் உடைய மனைவி வீரமணி ஆத்திரமடைந்து தனது மூன்று குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு அவரது வீட்டில் இருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் உள்ள தனியார் தோட்டத்தில் உள்ள பாழடைந்த கிணற்றில் மூன்று குழந்தைகளையும் உள்ளே தள்ளிவிட்டு தானும் குறித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இவரை சமாதானம் செய்வதற்காக பின்னால் ஓடி வந்த கணவன் ராமராஜ் குழந்தைகளுடன் மனைவி கிணத்தில் விழுவதைக் கண்டு அவரும் கிணற்றில் குதித்துள்ளார் .

கிணற்றின் உள்ளே நீர் இல்லாத காரணத்தினால் கிணற்றில் விழுந்த ஐந்து நபர்களும் பலத்த காயமடைந்துள்ளனர்.

தகவல் இருந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் கிணற்றில் விழுந்த ஐவரையும் படுகாயத்துடன் மீட்டனர்.

மீட்கப்பட்ட ஐவரும் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் போடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் வழியிலேயே ஜீவிதா, ஈஷா ஸ்ரீ ஆகிய இரு குழந்தைகளும் உயிரிழந்தனர்.

படுகாயம் அடைந்த மூன்று நபர்களும் தீவிர சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். போடி தாலுகா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்

  • Allu Arjun Pushpa2 box office collection புத்தாண்டில் புது மைல்கல்…அதிர வைக்கும் அல்லு அர்ஜுன் புஷ்பா2 வசூல்..!
  • Views: - 537

    0

    0