‘இது என்ன கையோடு வந்துருச்சு’… தண்ணீர் பைப்புகளை பிடுங்கி வீசிய காட்டு யானை… ஷாக் சிசிடிவி காட்சிகள்..!!

Author: Babu Lakshmanan
3 January 2024, 8:57 am

தொண்டாமுத்தூர் அருகே தண்ணீர் பைப்புகளை சேதப்படுத்தி சென்ற காட்டு யானையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

கோவை தொண்டாமுத்தூரை அடுத்த குப்பேபாளையம் பகுதியைச் சேர்ந்த விவசாயி சக்திவேல் அப்பகுதியில் தென்னை விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியாறிய காட்டு யானை ஒன்று சக்திவேலுக்கு சொந்தமான விவசாய தோட்டத்திற்குள் புகுந்து தென்னங்கன்றுகளை சேதப்படுத்தியுள்ளது.

மேலும் அங்குள்ள சொட்டு நீர் செல்லக்கூடிய தண்ணீர் பைப்புகளை உடைத்துள்ளது. இந்த காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவாகிய நிலையில், தற்போது அந்த காட்சிகள் வெளியாகி உள்ளது.

https://player.vimeo.com/video/899389093?badge=0&autopause=0&player_id=0&app_id=58479
  • Keerthy Suresh new glamorous look கவர்ச்சி உடையில் பிரபல நடிகருடன் குத்தாட்டம்…வைரலாகும் கீர்த்தி சுரேஷ் வீடியோ..!
  • Views: - 745

    1

    0