வாகன ஓட்டிகளை மிரட்டும் காட்டு யானை: சாலையை மறித்து அட்டகாசம்…அச்சத்தில் மக்கள்..!!(வீடியோ)

Author: Rajesh
27 April 2022, 9:03 pm

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் கோத்தகிரி சாலையில் குஞ்சப்பனை அருகில் இன்று காலை 11 மணியளவில் காட்டு யானையொன்று அருகில் இருந்த வனப்பகுதியில் இருந்து வெளியேறி நடமாடதொங்கியது.

சாலையின் நடுவே நடந்து செல்லும் இந்த யானை எதிர்படுவோரை அச்சுறுத்தி விரட்டியதோடு வாகனங்களையும் இடைமறித்து விடுகிறது.

இதனால் இவ்வழியே செல்வோர் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இது குறித்து தகவல் கிடைத்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று யானையை வனத்திற்குள் அனுப்பும் பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.

கோடை காலம் என்பதால் வனப்பகுதியில் இருந்து சமவெளி பகுதிக்கு இடம் பெயர்ந்து செல்லும் யானைகள் தண்ணீர் தேடி செல்வதால் சாலைகளை கடந்து செல்வதாக கூறும் வனத்துறையினர், சாலையில் யானைகளை கண்டால் வாகனத்தை விட்டு வெளியேறி அதனை புகைப்படம் எடுக்க முயற்சிப்பதோ தாங்களாகவே அதனை விரட்டவோ முயற்சிக்க வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கின்றனர்.

  • Aamir Khan Inroduce his 3rd lover 60 வயதில் 3வது திருமணம்… கல்யாண வயதில் உள்ள மகனை மறந்த பிரபல நடிகர்!