‘யானை எல்லாம் எங்களோட சாமி’… விவசாயி போட்ட கட்டளை… தடம் மாறாமல் சென்ற ஒற்றை காட்டு யானை.. வைரலாகும் வீடியோ!!

Author: Babu Lakshmanan
16 December 2023, 10:49 am

மேட்டுப்பாளையம் அருகே விவசாய தோட்டத்தில் நுழைந்த ஒற்றை காட்டு யானையை பேசியே வழி அனுப்பிய விவசாயியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டி கிராமம் மலை அடிவார கிராமமாகும். இங்குள்ள வனப்பகுதியில் இருந்து அடிக்கடி காட்டு யானைகள் வெளியேறி விளைநிலங்களில் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

அந்த வகையில், இன்று அதிகாலை தேக்கம்பட்டியில் உள்ள ஒரு விவசாய தோட்டத்தில் ஒற்றை ஆண் காட்டு யானை ஒன்று நுழைந்தது.

அதனை கண்ட விவசாயி ஒருவர், அதனை எந்தவித துன்புறுத்தலுக்கும் ஆளாக்காமல் தனது குடும்ப உறுப்பினர்களிடம் பேசுவது போல, ‘போ சாமி… போ சாமி போ…’ என, அதே வழிதான் அப்படியே போ என அன்பான முறையில் பேசினார். அந்த விவசாயி கூறியதை கேட்டு அந்த காட்டு யானையும் தோட்டத்தில் மீண்டும் நுழையாமல், பயிர்களையும் சேதப்படுத்தாமல் அங்கிருந்து மீண்டும் வனப்பகுதிக்குள் பயணித்தது.

தற்போது அந்த வீடியோ காட்சி வெளியாகி யானைக்கும், மனிதனுக்கும் நல்ல உறவு உள்ளது என்பதை வெளிக்காட்டியுள்ளது.

  • Ethirneechal 2 cast updates விஜய் டிவியில் இருந்து சன் டிவி-க்கு தாவிய நடிகை…அப்போ எதிர்நீச்சல் 2 வில்லி இவுங்க தானா..!
  • Views: - 3549

    0

    0