பிளிறியபடி பக்தர்களை துரத்திய காட்டு யானை… வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் நடந்த திக் திக் சம்பவம் ; ஷாக் வீடியோ!!

Author: Babu Lakshmanan
16 March 2024, 9:14 am

கோவை பேரூர் அருகே வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் பக்தர்களை பிளிறியவாறு துரத்திய காட்டு யானை செல்போன் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.

கோவை – பேரூர் அருகே வெள்ளியங்கிரி மலையில் உள்ள சிவன் கோவிலுக்கு சிவராத்திரி முன்னிட்டு மார்ச், ஏப்ரல், மே ஆகிய மூன்று மாதங்கள் மலைக்கு செல்ல பக்தர்களுக்கு வனத்துறை அனுமதி வழங்கி உள்ளது. கடந்த சில நாட்களாக வெள்ளியங்கிரி மலைக்கு செல்ல பக்தர்களின் கூட்டம் அதிக அளவில் வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில், மலையின் அடிவாரப் பகுதியில் வாகனங்கள் நிறுத்தும் இடம் அருகே வந்த ஒற்றை காட்டு யானையை, அங்கு நின்று கொண்டு இருந்த பக்தர்கள் பார்த்து உஷாராகினர். அப்பொழுது திடீரென அந்த யானை பக்தர்கள் கூட்டத்தை நோக்கி பிளிறி கொண்டு ஓடி வந்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பக்தர்கள் அங்கும் இங்கும் ஓடினர்.

இதனை அங்கு இருந்த பக்தர் ஒருவர் தனது செல்போனில் வீடியோ காட்சிகளாக பதிவு செய்து உள்ளார். இந்த வீடியோ காட்சிகள் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.

  • Keerthy Suresh new glamorous look கவர்ச்சி உடையில் பிரபல நடிகருடன் குத்தாட்டம்…வைரலாகும் கீர்த்தி சுரேஷ் வீடியோ..!
  • Views: - 338

    0

    0