திடீரென சாலையில் அன்ன நடைபோட்ட காட்டு யானைகள்… பாதி வழியில் வாகனங்களை நிறுத்திய வாகன ஓட்டிகள்..!!
Author: Babu Lakshmanan29 October 2022, 3:54 pm
கோவை : காலை நேரத்தில் பரபரப்பான மேட்டுப்பாளையம் – உதகை சாலையில் உலா வந்த காட்டு யானை கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை செல்லும் வழியில் கல்லாறு வனப்பகுதியில் ஏராளமான யானை, காட்டெருமை, மான் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி அவ்வப்போது சாலையின் ஒருபுறம் இருந்து மறுபுறம் கடந்து செல்கின்றன.
இந்த நிலையில் இன்று காலையில் பரபரப்பான ஊட்டி சாலையில் உலா வந்த காட்டு யானையை கண்டவுடன் வாகன ஓட்டிகள் அச்சத்தில் ஆழ்ந்தனர். பின்னர் சற்றுநேரத்தில் யானை அப்பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் சென்றது.இதனால் வாகன ஓட்டிகள் நிம்மதியடைந்தனர். அதன் பின்னரே தங்களது வாகனத்தை எடுத்துச் சென்றனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், “வாகன ஓட்டிகள் மலைப்பாதையில் பயணிக்கும் போது மெதுவாகவும், ஜாக்கிரதையாகவும் தங்களது வாகனத்தை இயக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.
0
0