குட்டியுடன் குடியிருப்பு பகுதியில் உலா வந்த காட்டு யானைகள்.. பட்டாசுகளை வெடித்து வனப்பகுதிக்குள் விரட்டிய வனத்துறையினர்..!!

Author: Babu Lakshmanan
2 January 2024, 9:13 am

கோவை வடவள்ளி பொம்மனாம்பாளையம் அருகே குடியிருப்பில் திடீரென குட்டியுடன் வந்த 4 காட்டு யானைகளை வனத்துறையினர் விரட்டினர்.

கோவை மருதமலை, நரசிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்பு அருகே கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் உலா வருகிறது. இந்நிலையில் மருதமலை அருகே உள்ள வடவள்ளி பொம்மனாம்பாளையம் டான்சா நகர் சி பிளாக் பகுதியில் திடிரென குட்டியுடன் 4 காட்டு யானைகள் புகுந்தது. இதனை கண்ட அக்குடியிருப்பு மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். மேலும் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

விரைந்து வந்த கோவை சரக வனத்துறை ஊழியர்கள் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் போராடியுடன் குட்டியுடன் உலா வந்த யானைகளை வனத்துறையினர் மருதமலை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். ஆனால், வனப்பகுதிக்குள் சென்ற யானைகள் மீண்டும் பாரதியார் பல்கலைகழகம் அருகே வெளியே காட்டு யானைகள் வந்ததால், அங்கு விரைந்த வனத்துறையினர் பட்டாசுகளை வீசி யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர்.

https://player.vimeo.com/video/899124873?badge=0&autopause=0&player_id=0&app_id=58479

இந்நிலையில், வடவள்ளி பொம்மனாம்பாளையம் குடியிருப்பு பகுதியில் குட்டியுடன் காட்டு யானைகள் உலா வந்த காட்சிகளை குடியிருப்பு மக்கள் செல்போனில் பதிவு செய்தனர். இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

  • Rafael Nadal retirement reaction by Dhanush ஓய்வு அறிவிப்பு.. நடிகர் தனுஷின் உருக்கமான பதிவு..
  • Views: - 335

    0

    0