ரயில் மீது மோதாமல் இருக்க சுரங்கப்பாதையை பயன்படுத்திய காட்டு யானைகள் : வைரலாகும் வீடியோ!!!
Author: Udayachandran RadhaKrishnan24 August 2023, 4:28 pm
ரயில் மீது மோதாமல் இருக்க சுரங்கப்பாதையை பயன்படுத்திய காட்டு யானைகள் : வைரலாகும் வீடியோ!!!
கோவை அடுத்து எட்டிமடை வாளையாறு ரயில்வே வழித் தடத்தில் அடிக்கடி ரயிலில் அடிபட்டு யானைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. மதுக்கரையில் இருந்து வாளையார் வரை உள்ள ரயில்வே வழித்தடம் வனப் பகுதியில் அமைந்து உள்ளதால் ரயில்வே தண்டவாளங்களை கடக்கும் யானைகள் விபத்தில் சிக்கி உயிரிழக்கின்றன.
ரயில் மோதி யானைகள் உயிரிழப்பதை தடுக்கும் விதமாக தெற்கு ரயில்வே சார்பில் ரூபாய் 7.49 கோடி மதிப்பீட்டில் 60 அடி அகலமும் மற்றும் 20 அடி உயரம் கொண்ட சுரங்கப் பாதை அமைக்கப்பட்டது.
யானையின் நடமாட்டத்தை அறிவதற்காக சுரங்கப் பாதையில் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. சுரங்கப் பாதை பயன்பாட்டுக்கு வந்ததும் யானைகள் இப்பகுதியை பயன்படுத்தாமல் இருந்து வந்தது.
இந்நிலையில் முதல் முறையாக காட்டு யானைகள் ஒன்று சுரங்கப் பாதை வழியாக வாளையார் அணைக்கு சென்றது சி.சி.டி.வி கேமராவில் பதிவாகி உள்ளது. யானைகள் சுரங்கப் பாதையை பயன்படுத்துவதன் மூலம் ரயிலில் அடிபட்டு உயிரிழக்கும் சம்பவங்கள் தடுக்கப்படும் என ரயில்வே துறையினர் தெரிவித்து உள்ளனர்.